Lagna1Resource id #4 Kumbam, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21500

Kumbam

Saturday , 28th January 2012 08:15:30 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Kumbam, கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள்;

உங்களுக்கு தடித்த கழுத்து இருக்கும். சுயமரியாதைக்கு நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, உங்களுக்கு எதிர்ப்பு இருக்கும். உங்கள் தலை வழுக்கையாக இருக்கலாம்

 கும்ப ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக கருத்தாக இருந்து எதிர்ப்படும் வாய்ப்புகளைக் கைநழுவ விடமால் பற்றிக் கொண்டு முன்னேறுவதில் கவனமாக இருப்பார்கள். தெளிவான சிந்தனை போக்கும் அவசரப்படமால் எந்தப் பிரச்சனையயும் பொறுமையாக அலசிப்பார்க்கும் சுபாவமும் அமைந்திருப்பர்.

 இந்த ராசி நேயர்களுக்குஇது பொருத்மாக  அமைகிறது.எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்பு மிகுந்த வர்கள். நிறையத் தோழர்களைப் பெற்றிருப்பர்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உணர்வு துடிப்பு இயற்கையாக அமைந்திருக்கும்.

 உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும். உங்கள் சகோதரர்களின் கெட்ட சகவாசம் உங்களை பாதிக்கும். 24, 25 வயதில், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நீங்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர். நீங்கள் அமைதி விரும்புபவர் நன்கு படித்தவர்.

 நீங்கள் பல விஷயங்களைப் பற்றியும், சதா சிந்தித்துக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிட விரும்புகிறீர்கள். கூரிய நினைவாற்றல் கொண்ட நீங்கள், உங்கள் எண்ணங்களில் விரைவாகச் செயல்படுகிறீர்கள்.குணசிலர்களாகச் சொல்ல முடியாது.

 ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளில் பிரவேசித்தால் முன்னுக்குவருவார்கள். பிற அமைப்புகளைப் பொறுத்துக் கலைத்துறையில் பிரகாசிப்பவர்களும் இவர்களில் ஒரு சிலராக இருப்பார்கள். தத்துவ மேதை களாகவேபொறியியல் துறை வலலுநர்களாகவோ மின்சராம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களாகவோ இருப்பார்கள்.

 இரும்பு சம்பந்தமான வியாபாரம் இவர்களுக்கு ஏற்ற தொழில் நுணுக்கக் கல்வி கற்றாலும் வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள். நீதி போதனையையும்மகான்களின் வாழ்வையும் சிறு வயதிலே யே இந்த ராசிக் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் காலத்துக்கேற்றமாறுதல்கள் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டுவிடும்.

நீங்கள் ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர். வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். உயரமாக இருக்கும் நீங்கள், நல்ல கவர்ச்சியான, கம்பீரமான தோற்றமுடையவர். உங்களுக்கு பல கஷ்டங்கள் இருந்தாலும், நீங்கள் அச்சமின்றி செயல்படுபவர். நீங்கள் சமயோசிதமாக செயல்படக் கூடியவர் அரசியலில் ஆர்வம் கொள்வீர்கள். பொது நிறுவனங்களிலும், நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டுத் துறையில், உங்களுக்கு விருப்பம் இருக்கும்.

 இந்த ராசியின் ஆட்சிக் கிரகம் சனியானதால் நீலக்கல் மோதிரம் உகந்தது .கும்ப ராசி நேயர்கள் சிறந்த மனிதாபிமானி என்று ஒரே வார்த்தையில் சோல்லி விடலாம் .இந்த ராசி நேயர்கள் நல்ல உயரமாக இருக்க மாட்டார்கள் .பெரும்பாலும் கறுப்பு வெளுத்த கறுப்பு என்ற மேனி நிறம் இருக்கும்.

 திவிர சிந்தனையும் இவர்களிடம் காணப்படுவதுடன் எடுத்துக் கொண்ட செயலைச் செய்து முடிக்கும் அறிவு நுணுக்கமும் சாதுர்யமும் காணப்படும் நேரிய சிந்தனை நல்ல நடத்தை அன்பு கருணை மன உணர்வுகள் ஆகியவற்றுக்கு  சிம்ம ராசியில் கோள்கள் அமைநதிருக்கும் தன்மை காரணமாகும்.

இப்படிச் சிம்ம ராசியானது நன்கு அமைந்ததால் கும்ப ராசி நேயர்கள் மிகுந்த சமூக நலவாதிகளாக தால் விளங்குவார்கள் மிகமிக உயர்ந்த பண்பு வாய்ந்த மனிதாபிமானம் நிறைந்த சமூக நலனில் விஷேச அக்கறை கொண்ட சீர் திருத்தச் செம்மல்கள் இந்த ராசி நேயர்கள் .

வலுவான உடற்கட்டையுடைய நீங்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள், நிலபுலன்களுக்கு சொந்தமாக இருப்பதுடன், மிகுந்த கவனமாகவும் பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும், நீங்கள் மிகுந்த உறுதியுடன் இருப்பவர் .நீங்கள், பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விரும்புகிறீர்கள் .அதன் விளைவாய் உங்களுக்கு அவப் பெயரும் ஏற்படும். உங்கள் உணர்ச்சிகளையோ, காதலையோ நீங்கள் வெளிப்படையாக, எடுத்துக்காட்டுவதில்லை. நீங்கள் மிகவும் தந்திரம்மிக்க சாமர்த்தியசாலி. நன்கு படித்த, புத்திசாலியான ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள்.

 சீரிய சிந்தனையும் தெளிவான திட்டங்களும் இருந்தாலும் கும்பராசிநேயர்கள் நினைத்ததைச் சாதிப்பார்கள். புதிதாக ஒன்றைக் கண்டுப்பிடிக்கும் நுண்ணுணர்வு பெற்றவர்கள். மற்ற ராசி நேயர்கள் விட மனித முன்னேற்றுத்துக்காக ஆராய்ச்சி செய்து புதுவிதக் கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடிப்பதில் சிறந்தவர்கள்.

ரயில்வே மின்சராம் ஆகிய தறைகளிலும் கற்பனை ஒட்டம் நிரம்பிய எழுத்தாளராகவும் இவர்கள் உயர்ந்து விளங்குவார்கள். பொதுவாகவாக கும்ப ராசி நேயர்களை நேர்மை மிக்கவராகவும் நன்மை தீமை கெட்டவன் அறி வாளியாகவும் சொல்லலாம்.

 இந்த ராசி நேயர்கள் பேச்சை நம்பிக்காரியத்தில் இறங்கலாம். பாதிவழியில் கைவிரிக்க மாட்டார்கள் .நாணயம் தவறாதவர்கள் என்று சொல்லலாம். சொல்வதிலும் கொடுத்ததை திருப்பிப் பெறுவதிலும் கொடுத்ததை திருப்பிப் பெறுவதிலும் அதிககவனம் காட்டுவார்கள்.  Tags : Kumbam, ,கும்பம்,Kumbam,


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in