Lagna1Resource id #4 Makaram, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21499

Makaram

Saturday , 28th January 2012 08:04:28 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Makaram, மகரம் லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள்;

 நீங்கள் மகர லக்னத்தில் பிறந்தவர்.. உங்களுக்கு பயணம் செய்வதில் நல்ல ஆசை இருக்கும். கவர்ச்சியான கண்களை உடைய நீங்கள், மிகவும் தந்திரமானவர் .சாமர்த்தியசாலி புத்திசாலி. சில நேரங்களில், கொஞ்சம் சோம்பேறியும்கூட. நீங்கள் பணத்தை அதிகமாக செலவு செய்கிறீர்கள். மதத்தில், நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை கவிதையை ரசிக்கிறீர்கள்.

 சமய சந்தர்ப்பம் என்றால் வளவளவென்று பேசாமல் அவசியமான முக்கியமான கருத்துகளை யே கூறுவர் விடா முயற்சி இவர்களின் பிறவிக்குணம்.தோல்வியைக் கண்டு தளர்ந்து போகமால் தோல்வி ஏற்பட்டதற்குரிய காரணத்தை ஆராய்ந்து பார்த்துஅந்தக் காரணங்களைத் தவிர்த்துவிட்டு மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயலில் இறங்குவர்.

எதையும் நிதானத்துடன் ஏற்றுக்கொள்வர் .சுகந்திரத்தை விரும்புவர் சுயபலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பர். எதையும் நன்றாக யோசித்தே முடிவு எடுப்பர் .சேவை மனப்பான்மை இருந்தால் தம்மிடமுள்ள உடலின் சக்தி பண வசதி ஆகிய இரண்டடையும் கடைசி வரை செலவிட்டு அழியாப் புகழ் பெறுவர்.

உங்களுக்கு ஏராளமாய் பணம் இருந்தும், செல்வம் நிலையாய் இருக்காது உயரமாகவும் சிவந்த மேனியுடனும், நீங்கள் தோற்றம் கொண்டிருப்பீர்கள். உங்கள் திட்டங்களிலும் முயற்சிகளிலும் மிகவும் கவனமுடைய நீங்கள், உங்கள் அறிவாற்றல் முலம் வெற்றி காண்பீர்கள்.

 ஓயாமல் பேசும் நீங்கள், கலைகளில் ஆர்வமிக்கவர் .கலைசார்ந்த வழிகளில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நீங்கள், உங்களைப்பற்றியே நினைப்பவர் உங்களுக்கு மிகவும் அடர்த்தியான கேசம் இருக்கும். பணத்தை, வீணாகச் செலவிட்டு விரயம் செய்வீர்கள்.

 குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகவும் பலவீனமாகவும் ஒல்லியாகவும் இருந்திருக்கலாம். பிறகு, போகப்போக, 14 முதல் 19 வயது வரையான காலத்தில், நல்ல உயரமாக வளர்ந்துவிடுவீர்கள். உங்களுக்கு மெலிந்த உருண்டையான முகம் இருக்கும். உங்கள் கால் முட்டில் ஒரு தழும்போ, மச்சமோ இருக்கலாம்.

 நீங்கள் அனுபவ ரீதியில் செயல்படுபவர் அரசியலில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் இடர்ப்பாடுகளைக்கண்டு அஞ்சுவதில்லை. உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர். பல இயல்களைக் கற்றறிந்தவர். நீங்கள் உங்கள் திட்டங்களை, மிக விரைவாக ஏற்பாட்டுடன் நடத்தி, நிறைவேற்றக் கூடியவர். உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது. நீங்கள் நன்கு படித்தவர்.

 இரண்டுமுறையிலும் இவர்கள் உன்னதாக விளங்குவர். பிற ராசியில் பிறந்தவர்களை விடத் தங்களுக்காகவே வாழ்வது என்ற குணத்தை இந்த ராசி நேயர்கள் சிலரிடம் காணப்படும்.

ஆனால் சுயநலவாதிகள் என்று சொல்லிவிட முடியாதபடியும் நடந்து கொள்வர் இப்படி வாழ்பவர்கள் ஏதோ கவலையில் ஆழ்ந்திருப்பவர்களைப் போல் காணப்படுவர். தஙகளின் உள்ளத்து உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ளலாம். தாங்களும் துயரப்பட்டுக் கொண்டு தங்களைச் சார்ந்த பிறருக்கு வருத்தத்தைக் கொடுத்துச் கொண்டு இருப்பர். ஆனால் தங்களின் முன்னேற்றத்தில் பொருத்த தடையை எதிர் கொண்ட வெற்றி பெற முடியமால் தோல்வி கண்டவர்களிடம் மிக அதிகமாகக் கருமித்தனமும் பேராசையும் காணப்படும்.

 பொதுவாக மகர ராசிக்காரார்கள் வாழ்கையின் மிக உள்ளத்தை சாமர்த்தியமும்  பொறுமையும் பெற்றே விளங்குவர் என்பதே பொது நியதி.. திட்டமிட்ட வாழ்கையில் பிறர் கனவு கண்டு கொண்டிருக்கும் அரிய அரிய செயல்களைச் செய்து முடித்து காரியவாதிகளாக விளங்குவர்.

தங்களை எதிர்ப்படும் சந்தர்ப்பந்கள் எல்லாவற்றையும் விடமால் பிடித்துக் கொள்வர் புதுவித எண்ணங்களை த் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் தீரர்கள். பரம்பரைச் செல்வக் குடும்பம் என்ற புகமும் இவர்களுக்கு உண்டாகும் நிலம் வீடு சம்பந்தமான திட்டங்களில் இவர்களுக்கு வெற்றியே ஏற்படும்.

 நின்று நிதானித்துச் செய்யும் எந்தத் தொழிலிலும் இவர்கள் பிரகாசிப்பர் பெரிய அபரிய காண்டிராக்ட் பணிகளையும் எடுத்துக் கச்சிதமகச் செய்வர். பல தேசங்களில் கிளை அலுவலங்களை நிர்மாணித்து ஊர்க்கு ஊர் பறக்கும் தொழில் மேதைகள் இவர்களே.இந்திய மனத்தத்துவ முறைக்கு இந்த ராசி நேயர்களைச் சான்றாகக் காட்டலாம்.

 

   Tags : Makaram, ,மகரம்,Makaram,


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in