Lagna1Resource id #4 Meenam, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21501

Meenam

Saturday , 28th January 2012 08:23:33 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Meenam, மீனம் லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள்;

நீங்கள் மீனத்தின் அதிபதி குரு. உங்களுக்கு, பெரிய, கவர்ச்சியான கண்கள் இருக்கும். உங்களுக்கு மிகவும் கவர்ச்சியான தனித் தோற்றமும் இருக்கும். நீங்கள் மிகவும் அன்பும் கனிவும் கொண்டவர். உங்கள் மனைவியிடம், மிகுந்த ஈடுபாடு கொண்டவர் காதல் கொண்டவர். உங்கள் தலை, பெரியதாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து, நீங்கள் மனமகிழ்ச்சி பெறுவீர்கள்.

இவர்கள்  மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுவார்கள் .இந்த ராசி ஆண்களோ பெண்களோ வாழ்வில் அதிக நெறியுடன் வாழவார்கள் என்று சொல்ல முடியாது.  ஈகை இரக்கக் குணம் காணப்படும்கணிதத்திலும் ஜோதிடத்திலும் தேர்ச்சி பெறுவார்கள்.

பொதுவாக இரக்க சுபாவமும் மிக்கவர்கள் பிராணிகளிடம் அன்பாக நடந்து கொள்ளவார்கள் என்று நாய் பூனை போன்ற மிருங்களை விரும்பி வளர்ப்பார்கள்.எதையும்' முறையாகவும் செய்ய வேண்டி உழைப்பார்கள். பிறர் செய்த காரியங்களையும் மேற்கொண்டு இவற்றை சீர் செய்து மெருகு கொடுப்பார்கள் பொறுமையுடன் எதிலும் ஈடுபடுவார்கள்.

 உடல் இன்பங்களை விரும்புபவர். உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்களுக்கு சாதாரணமான வெற்றிகளே கிடைத்திருக்கலாம். உங்கள் வாழ்க்கையின் நடுவயதுக் காலத்தில், சில இடர்ப்பாடுகள் தோன்றலாம். ஆனால் பிற்பகுதியில், பெருமளவிற்கு சந்தோஷங்கள் கிடைக்கும். 21 வயதுக்குப் பின்னர், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள்.

 நல்ல சதைப்பற்று மிக்க கொழுப்பான கன்னங்களும், சாம்பல் வெளுப்பு நிறமும் கொண்ட நீங்கள், எப்போதும் தூங்கிவழியும், மந்தமான கண்களை உடையவர். உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள் பெருமளவிற்கு தண்ணீர் அருந்துவீர்கள். தண்ணீரில் முழ்கிப் போய்விடக்கூடிய விபத்துக்கள் குறித்து, நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

 தாங்கள் வாழும் சமுதாயத்துக்காகவும் நெருங்கிய உறவினர்களுக்காகவும் உழைக்க முன் வருவார்கள் பெண்கள் என்றால் அதிக அக்கறை காட்டுவார்கள். பள்ளிப் படிப்பைவிட இயற்கையைக் கூர்ந்து கவனிக்கும் திறன் இவர்களிடம் மிகுந்து காணப்படும் .படிப்பில் அக்கறை காட்டாவிட்டாலும் பிற்காலத்தில் எதாவது ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டு வாழ்வில் சோபிப்பார்கள்.

இந்த ராசியில் பிறந்த நேயர்களில் சிலருக்குக் கற்பனை வளம் இருக்கும் .சிறந்த நாவலாசிரியர்களாகவும் விளங்குவார்கள். விருப்பம் காட்டுவர். அதனால் பல விஷயங்களையும்த் தெரிந்து கொள்ளவர்கள் .

 ஒரளவுக்குக் கற்பளை வளம் நிறைந்தவர்களானதால் இவர்களை அதிக நேரம் தனிமையில் விடக் கூடாது . நிஜ வாழ்ககையில் பிரவேசிக்கும் போது அவற்றின் சாயலைக் கூட காணமால் ஏமாற்றம் அடைவார்கள் அதனால் இந்த ராசிக் குழந்தைகளைக் கவனித்து வளர்கக வேண்டும் . நீங்கள் பெருமளவிற்கு தண்ணீர் அருந்துவீர்கள். தண்ணீரில் முழ்கிப் போய்விடக்கூடிய விபத்துக்கள் குறித்து, நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்..அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள். நல்ல அழகிய தோற்றமுடைய உங்களுக்கு, எடுப்பான முக்கும், அழகிய பல்வரிசையும், இருக்கும். குடும்பத்தில் நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள்.

 பணம் சம்பாதிப்பதில், உங்களுக்கு சில சிரமங்கள் இருக்கலாம். நீங்கள் நிறைய பணம் சம்பாதித்தாலும் பெருமளவிற்கு செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் உங்கள் எதிரிகளுக்குக்கூட உதவி செய்யக் கூடியவர். நீங்களும் உங்கள் மனைவியும், விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். நீங்கள், கவிதையிலும் இலக்கியத்திலும்கூட, மிகுந்த விருப்பமுடையவர்.

 வெளியில் கூற முடியாத அல்லது கூற விரும்பாத தோல்விகளை இவர்கள் எதிர்கொள்ளவர்கள். இந்தத் தோல்விகளைப் பற்றித் தெளிவாக எதுவும் கூற முடியவில்லை . இந்த ராசி நேயர்கள் அடிக்கடி எடுத்த மூயற்சிகளில் தோல்வி உண்டாக்கலாம். தன் சுகத்துக்காகவே வாழ வேண்டும் என்ற தன்னலம் மிகுந்து வாழ்வதால் சமூகத்துடன் ஒட்டாkல் ஒதுங்கி வாழும் சுபாவமும் காணப்படும்.

 தன் காலில் நின்று தான் வளர்ந்து விடலாம் என்ற தன்னம்பிக்கை மிக்கவர்களை இந்த ராசியில் பெரும்பாலும் காண முடியாது. நல்ல பழக்கவழக்கங்களையம் பெரியவர்களின் தொடர்பையும் இவர்கள் பெருக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் கெட்டவர்களின் சேர்க்கையும் தீய பழக்க வழக்கங்களும் இவர்களைச் சடுதியில் பற்றிக் கொண்டுவிடும். உணார்ச்சி மிக்கவர் அடக்கமும் பொறுமையும் உடையவர்கள். இரக்கமும் அன்பும் கொண்டவர்கள் எதையும் பொறுமையாக கொள்வார்கள்.

 

 



  Tags : Meenam, ,மீனம்,Meenam,


















மகளிர்













பிற ராசிகளுக்கான பலன்கள்












Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in