Lagna1Resource id #4 Risabam, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21484

Risabam

Friday , 27th January 2012 11:51:26 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Risabam,

ரிஷபம் லக்னத்துக்கான பொது பலன்கள்


நீங்கள் ரிஷப லக்னத்தில் பிறந்தவர். ரிஷபம், நிலம் சார்ந்த நிலையான, இரண்டாவது ராசியாகும். இதற்கு அதிபதி சுக்ரன் எனவே ரிஷப ராசி மனிதனின் தாடையையும் கழுத்துப் பாகத்தையும் குறிக்கிறது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் சுமாரான உயரமாகவோ குள்ளமாகவோ இருப்பார்கள். அவர்களுடைய உடல்கட்டு நன்கு அமைந்திருக்கும் .

 நீங்கள் கோபக்காரராக இருப்பீர்கள். நீங்கள் தீய குணமுடையவர். வாழ்க்கையில், சுகபோகங்களை அடைவதற்கு நீங்கள் விருப்பம் கொண்டவர். நீங்கள் மதுபானத்தில் மிகுந்த விருப்பமுடையவர்.

 நீங்கள் நேர்மையான சுபாவம் கொண்டவராதலால், மற்றவர்கள் உங்கள் கருத்துக்களை சார்ந்திருக்கிறார்கள். நீங்கள் ராஜ தந்திரம் படைத்தவர் உங்கள் மனதைப் புரிந்து கொள்வது, அவ்வளவு எளிதல்ல. நீங்கள் தோட்டங்கள், மனைகள் போன்ற எஸ்டேட் வசதிகளையும் அனுபவிப்பீர்கள். கலையில் ஆர்வம் கொண்ட நீங்கள், கலைசார்ந்த முயற்சிகளில் மிகப் பிரமாத வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு மென்மையான சருமம் இருக்கும். அழகையும் சொகுசையும், மிகவும் விரும்பும் நீங்கள், உங்கள் இல்லத்தில் ஆசை கொண்டவர். உங்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். உங்கள் மனைவி/கணவர் - உயரிய அந்தஸ்தில் இருக்கக்கூடும்.

 நீங்கள் பதட்டப்படாமல், மென்மையாக பேசக்கூடியவர் ஓரளவிற்கு, உங்கள் சுபாவத்தில், பெண்மை குடிகொண்டிருக்கும். இளகிய, கருணை நெஞ்சம் படைத்த நீங்கள், நல்ல மனிதர்களுடன் சம்பந்தப்பட்டவர். உங்களுக்கு நீண்ட பற்கள் இருக்கும். சமுதாயத்தில் நீங்கள் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். ஆழ்ந்த உள்ளத்து உணர்ச்சிகளைக் கொண்ட நீங்கள் அமைதியை விரும்புகிறவர். சமுக மற்றும் குடும்ப ரீதியிலான கடமைப் பொறுப்புக்களை, நீங்கள் எப்போதும் நிறைவேற்றி வைத்திட முயலுகிறீர்கள். காதல் விவகாரங்களில், நீங்கள் எப்போதுமே, விசுவாசத்துடன் இருக்க முயற்சி செய்கிறீர்கள்.

 நண்பர்களிடம் சுமுகமாகப் பேசினாலும் ஒரளவு ரகசியத்தை மனதை விட்டுச் சொல்ல மாட்டார்கள். ரிஷபராசி நேயர்களில் சிலர் அதிகத் தர்மசிந்தனை கொண்டவர்கள் பிரதிப் பிரயோசனம் எதிர்பாராமல் உதவி செய்யும் தன்மை கொண்டவர்களாக இருப்பவர்கள்.

ரிஷபராசி  நேயர்கள் கன்னி ராசியிலோ மகர ராசியிலோ பிறந்தவர்கள் ஜோடி சேர்ந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் . சிம்மம் கும்பம் ராசிகள் பிறந்தவர்களைச் சேர்க்காமல் இருப்பது நல்லது. ரிஷப ராசிக்குச் சுக்கிரன் சொந்த வீட்டுக்காரனாகவும் சந்திரன் உச்சனாகவும் இருப்பதால் இந்த ராசி நேயர்கள் மணவாழ்க்கையைச் சுவைப்பதில் மிக்கக் கவனமாக இருப்பார்கள்.

 கற்பனைக்கோட்டை கட்டி அதில் வாழ்ந்து மகிழ மாட்டார்கள் வாழ்க்கைப்பிரச்சைகளைக் கண்டு தயங்கித் தள்ளிப் போடமால் அப்போதைக்கு அப்போதே எதிர்நீச்சல் அடித்துக் சமாளிப்பர்.


  Tags : ரிஷபம், ,Rishabam, ,லக்னத்துக்கான, ,பொது, ,பலன்கள்;, , , ,Risabam,


















மகளிர்













பிற ராசிகளுக்கான பலன்கள்












Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in