அக்டோபர் - டிசம்பர் மாத காலத்தில் தங்கத்தில் முதலீடு 10% அதிகரிக்கும்

அக்டோபர் - டிசம்பர் மாத காலத்தில் தங்கத்தில் முதலீடு 10% அதிகரிக்கும்
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) பொதுமக்கள் தங்கத்தில் மேற்கொள்ளும் முதலீடு 7 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து இருந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ள தால் கடந்த ஐந்து தினங்களாக தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் விற்பனை அதிகரித்து வருகிறது என மும்பை தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் சங்கத் தலைவர் மோஹித் காம்போஜ் தெரிவித்துள்ளார். பண்டிகை மற்றும் திருமண காலத்தை முன்னிட்டு தங்க ஆபரணங்கள் விற்பனையும் அதிகரிக்கும்.

கடந்த 15 தினங்களில் சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு ஒரு மாதத்திற்கு முன்னர் 55-ஆக இருந்தது. இது, தற்போது 52-ஆக உள்ளது. அதாவது, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால், இறக்குமதி செலவினம் குறையும். ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு கோடி டாலர் மதிப்பிற்கு தங்கத்தை இறக்குமதி செய்ய ரூ.55 கோடி தேவைபட்டது. தற்போது இது ரூ.52 கோடியாக குறையும். தங்கம் இறக்குமதியில் நம் நாடு உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதையடுத்து 10 கிராம் தங்கம் விலை ரூ.31,500-ஆக குறைந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதம் ஆதாயம் கிடைத்துள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளதால், பணத்தை ரொக்கமாக வைத்திருப்பதைக் காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக தங்கத்தை வாங்காமலேயே அதில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கும் கோல்டு ஈ.டி.எஃப். எனப்படும் தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் பொதுமக்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் அவர்களுக்கு ïனிட்டுகள் வழங்கப்படும். இவற்றை பங்குகளைபோன்ற எளிதில் வாங்கவும், விற்பனை செய்யவும் முடியும்.

கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தங்க பரஸ்பர நிதி திட்டங் களுக்காக நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 5 சதவீதம் அதிகரித்து ரூ.10,600 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இந்த திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் மதிப்பு 12.90 சதவீதம் உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் காலாண்டில் தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் ஈர்க்கும் முதலீடு 16 சதவீதம் அதிகரிக்கும் என முன்னறி விப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் தங்கம் இறக்குமதி 6,000 கோடி டாலராக உயர்ந்தது. இதன் காரணமாக, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து பொருளாதாரத்தில் தாக் கத்தை ஏற்படுத்தியது. இதனை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் மீதான இறக்குமதி வரியை இரண்டு மடங்கு உயர்த்தியது. இதன் பிறகு தங்கம் இறக்குமதி குறைந்து வருகிறது.

தங்க ஆபரணங்களில் முதலீடு அதிகரிப்பதால் நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது. எனவே, வங்கி டெபாசிட்டுகள், சிறு சேமிப்பு பத்திரங்கள், பங்குச் சந்தைகள், கடன்பத்திரங்கள் போன்றவற்றில் பொதுமக்களின் முதலீட்டை அதிகரிக் கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
https://goo.gl/cZzbnW


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்