அடுத்த 15 மாதங்களில் செல்போனில் இணையதள பயன்பாடு அதிகரிக்கும்

அடுத்த 15 மாதங்களில் செல்போனில் இணையதள பயன்பாடு அதிகரிக்கும்
நம் நாட்டில், அடுத்த 15 மாதங்களில் செல்போன்களில் இணையதள பயன்பாடு பன்மடங்கு அதிரிக்க உள்ளது. இதனையடுத்து 2014 மார்ச் மாதத்திற்குள் செல்போனில் இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 13.06 கோடியை எட்டும் என அண்மைக் கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2012 அக்டோபர் மாதத்தில் செல்போன்களில் 7.87 கோடி பேர் இணையதளங்களை பயன்படுத்தினர். டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 8.71 கோடியாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் இது மேலும் உயர்ந்து 9.29 கோடியை எட்டும் என்றும், 2015 மார்ச் மாதத்தில் 16.50 கோடியை நெருங்கி விடும் என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2009 மார்ச் நிலவரப்படி நம் நாட்டில் செல்போனில் இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 41 லட்சமாக இருந்தது. பொதுவாக செல்போனில் ஆன்லைன் விளையாட்டுக்களில்தான் 50 சதவீதத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர். 30 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் இணையதள செய்திகள் மற்றும் வீடியோக்களை பார்வையிடுவோராக உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
https://goo.gl/5v4mRz






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்