அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
கேரள மற்றும் தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு சாதகமாக சூழல் நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.

இதனிடையே மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், எனவே குமரிக்கடல், லட்சத்தீவு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேரளா , கர்நாடக, அந்தமான் கடலோர கடல் பகுதிகளுக்கும் 31ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது, ' கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 7 செ.மீ. மழையும், திருச்சியில் 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் இன்று (மே 28ம் தேதி ) வரையிலான கால கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்துள்ள மழையின் அளவு 150 மி.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 122 மி.மீ. இது இயல்பை விட 23% அதிகமாகும்', இவ்வாறு அவர் கூறினார்.
https://goo.gl/fsGYEg






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது