tamilkurinji logo


 

அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது

First Published : Monday , 20th August 2018 12:51:10 PM
Last Updated : Monday , 20th August 2018 12:51:10 PM


அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட   திருடன் கைது ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

அடையாறு, வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல திருடனை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.2 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


சென்னை அடையாறு காவல் மாவட்டங்களான  அடையாறு, வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. 


குறிப்பாக, வேளச்சேரி பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த தொடர்  திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

 இதையடுத்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் சஷாங் சாய் தலைமையில்  வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் பூட்டுகள் அனைத்து ஒரே மாதிரியாக உடைக்கப்பட்டிந்ததை கண்டுபிடித்தனர்.

அனைத்து இடங்களிலும் பதிவான  சிசிடிவி கேமரா காட்சிகளிலும் ஒரே வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது.

விசாரணையில், எடைப்பாளையம் பெரியார் நகர் சத்யா கார்டனை சேர்ந்த  பிரபல கொள்ளையன் அனுப்குமார் (32) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அனுப்குமாரை நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார்  பிடித்து விசாரணை நடத்தினர்.

 அதில், அனுப்குமார் பகல் நேரத்தில் ரயில்களில் வந்து அடையாறு, வேள்சேரி, கிண்டி பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு குறித்து  கொள்வார். பிறகு இரவு நேரத்தில் அந்த வீடுகளுக்கு சென்று பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

அந்த வகையில் அடையாறு,  வேளச்சேரி, கிண்டி ஆகிய பகுதிகளில் கடந்த 8 மாதத்தில் 17 வீடுகளில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பிரபல திருடன்  அனுப்குமாரை கைது செய்தனர். அவனிடம் இருந்து 1.2 கிலோ தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட   திருடன் கைது ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட   திருடன் கைது ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட   திருடன் கைது ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in