அண்ணன், தம்பி வெட்டிக்கொலை- நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை

அண்ணன், தம்பி வெட்டிக்கொலை- நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை
 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வளப்பூர்நாட்டில், நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், அண்ணன், தம்பியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

நரபலிக்காக இரட்டைக் கொலை நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு அருகே உள்ள ஆலவாய்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி(48). இவரது சகோதரர் ரங்கன்(45). இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(40). இவர்கள் 3 பேர் இடையே, கடந்த ஓராண்டாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை, வளப்பூர்நாட்டில் உள்ள சுடுகாட்டில் முத்துசாமி, ஸ்ரீரங்கன் ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.


இதுகுறித்த கொல்லிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அவர்களது சடலங்களுக்கு அருகே வாழை இலையில் முட்டை, குங்குமம், கற்பூரம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை நடத்தியதற்கான அடையாளம் காணப்பட்டது.

எனவே, நரபலி கொடுக்கும் நோக்கில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த மர்மநபர்கள், முத்துசாமியையும், ஸ்ரீரங்கனையும் வெட்டி கொலை செய்துவிட்டு, சடலங்களை நள்ளிரவில் சுடுகாட்டில் வைத்து பூஜை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே, கொலையானவர்களுடன் நிலத்தகராறில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணன் தற்போது தலைமறைவாகி விட்டார். எனவே, அவருக்கு இதில் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
https://goo.gl/Xd9dZy


03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது