அமெரிக்கா, பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்

அமெரிக்கா, பாகிஸ்தானை காட்டிலும்  இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்
இந்தியாவில் பெட்ரோல் விலை அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. அதேசமயம், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இந்நிலையில், டீசல் விலை பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மிகவும் குறைவாக உள்ளது.

புதுடெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.46-ஆக உள்ள நிலையில், அமெரிக்காவில் ரூ.50.44-ஆகவும், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் முறையே ரூ.53.32 மற்றும் ரூ.61.56-ஆக உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை முறையே ரூ.105.10, ரூ.111.03 மற்றும் ரூ.114.42-ஆக உள்ளது.

இந்தியாவில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.41.32-ஆகத்தான் உள்ளது. இது அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் குறைவாகும்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான மத்திய ராஜாங்க அமைச்சர் ஆர்.பி.என்.சிங் நாடாளுமன்றத்தின் மக்களவையில், "பிற நாடுகளைப் போன்றுதான் இந்தியாவிலும் பெட்ரோல் விலை உள்ளது. அதேசமயம், ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் டீசல் விலை மிகவும் குறைவாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் பெட்ரோலை காட்டிலும் டீசல் விலை மிகவும் குÛவாக உள்ளது. வரிகளே இதற்கு முக்கிய காரணமாகும். ஒரு லிட்டர் பெட்ரோல் மீது உற்பத்தி (கலால்) வரி ரூ.14.78-ஆக உள்ள நிலையில், டீசல் மீது இந்த வரி ரூ.2.06-ஆகத்தான் உள்ளது.

நம் நாட்டில், மாநிலங்களுக்கிடையில் பெட்ரோல் விலை வித்தியாசமாக உள்ளது. `வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு வரியில் உள்ள வேறுபாடே இதற்கு காரணமாகும். இந்தியாவிலேயே கொல்கத்தாவில் தான் (ரூ.76.15) பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. கோவா மாநிலத்தில் பெட்ரோல் மீது மதிப்பு கூட்டு வரி எதுவும் கிடையாது. இதனையடுத்து, நம் நாட்டிலேயே கோவா மாநிலத்தின் தலைநகரான பனாஜியில் விலை (ரூ.57) மிகவும் குறைவாக உள்ளது.

வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் வகையில் டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த எரிபொருள்களை அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்வதால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.550 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலையையும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.
https://goo.gl/1J68Mm


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்