tamilkurinji logo


 

அரசு நிதிஉதவி பெற்றுத் தருவதாக ஏமாற்றி 50 பெண்களை கடத்திய வாலிபர் கைது,




செய்திகள் >>> தமிழகம்

அரசு நிதிஉதவி பெற்றுத் தருவதாக ஏமாற்றி 50 பெண்களை கடத்திய வாலிபர் கைது

First Published : Saturday , 24th December 2011 09:23:23 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


அரசு நிதிஉதவி பெற்றுத் தருவதாக ஏமாற்றி 50 பெண்களை கடத்திய வாலிபர் கைது,

அரசு நிதிஉதவி வாங்கித் தருவதாக ஏமாற்றி கடத்தப்பட்ட +1 மாணவி, மதுரையில் மீட்கப்பட்டார். கடத்தியதாக கைதான வாலிபர் தமிழ்நாட்டில் 50-க்கு மேற்பட்ட பெண்களை கடத்தியவர் என்ற பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்துள்ள கோழிக்கால் நத்தம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர், பாஸ்கர். அவருடைய மனைவி சிவகாமி. அவர்களுடைய மகள் யமுனா, +1 படித்து வருகிறார்.

யமுனாதேவியின் அண்ணன் மருத்துவ படிப்பில் சேருவதற்கு முதல்வர் நிதி உதவி அளித்து இருந்தார். இந்த தகவலை அறிந்த வாலிபர் ஒருவர், யமுனாவுக்கும் கல்வி நிதியுதவி பெற்றுத் தருவதாக கூறி, மாணவி யமுனாவை அவருடைய குடும்பத்தினருடன் காரில் சென்னைக்கு அழைத்து வந்தார். சூளைமேடு பகுதியில், பாஸ்கர் குடும்பத்தினரை ஏமாற்றிவிட்டு மாணவி யமுனாவை மட்டும் அந்த வாலிபர் காரில் கடத்திச்சென்று விட்டார்.



கடந்த 19-ந்தேதி அன்று இந்த சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக பாஸ்கர் கொடுத்த புகாரின்பேரில், சென்னை சூளைமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், யமுனாவை கடத்திச் சென்ற வாலிபர், தமிழ்நாட்டில் மாணவிகள் உள்பட 50-க்கு மேற்பட்ட இளம்பெண்களை கடத்தியவர் என்றும், 3 மாவட்ட போலீசார் அவனை தீவிரமாக தேடி வரும் திடுக்கிடும் தகவலும் போலீசாருக்குத் தெரிய வந்தது.

அந்த வாலிபர், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள அழகிய நகர், கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் என்ற கண்ணன் (வயது 30) என்று தெரிய வந்தது. இதனால் உஷார் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். தேவைப்பட்டால் அவரை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில், ஸ்ரீதரை தனிப்படையினர் திருச்சியில் முகாமிட்டு தீவிரமாக தேடி வந்தனர். இதை அறிந்த ஸ்ரீதர் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு மதுரைக்கு இடம் பெயர்ந்தார். தனிப்படை மதுரையில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டு தேடி வந்தது. ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாணவியுடன் வெளிïருக்கு தப்புவதற்காக மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு நேற்று மதியம் அவன் வந்தார். அப்போது அவர்களை காதல் ஜோடி என்று நினைத்து அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் அது சென்னையில் கடத்தப்பட்ட மாணவி யமுனாதேவி என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரையில் முகாமிட்டு இருந்த சென்னை தனிப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்த தனிப்படையினரிடம் ஸ்ரீதரையும், யமுனாதேவியையும் ஒப்படைத்தனர். இருவரும் சென்னைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டனர்.

மதுரையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்ரீதர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அவர் கூறியதாவது:-

யமுனாவின் அண்ணன் கோபி மருத்துவ படிப்பில் சேர முதல்-அமைச்சர் நிதி உதவி அளித்த செய்தியை நான் பத்திரிகையில் படித்தேன். இதைக் கொண்டு கோபியின் தங்கை யமுனாவுக்கும் நிதி உதவி பெற்று தருவதாக கூறி கடத்த திட்டமிட்டேன். அதன் படி சில நாட்களுக்கு முன்பு அவர்கள் குடும்பத்தாரிடம் பேசினேன். அவர்களும் என்னை நம்பினார்கள்.

இதைத் தொடர்ந்து யமுனா மற்றும் அவரது உறவினர்களை சென்னைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு உறவினர்களை ஓரிடத்தில் இறக்கிவிட்டுவிட்டு யமுனாவை மட்டும் அழைத்துச் சென்றேன். அவளை முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கு அழைத்து செல்வதாக கூறி திருச்சிக்கு அழைத்து வந்துவிட்டேன்.

அங்கு எங்களை போலீசார் பின்தொடர்வதை அறிந்தேன். இதனால் மதுரைக்கு வந்தேன். மதுரையில் அவளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் மதுரையிலும் போலீசார் எங்களை தேடுவது தெரிந்தது. இதனால் நெல்லைக்கு செல்ல திட்டமிட்டு மாட்டுத்தாவணி சென்றேன். அங்கு போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.

பல பெண்களை கடத்திய சம்பவம் பற்றி ஸ்ரீதரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடத்தல் வழக்கில் இருந்து தப்பிக்கவே திருமணம் செய்வதற்காக யமுனாவை கடத்தியதாக ஸ்ரீதர் கூறுவதாக போலீசார் கருதுகிறார்கள்.

இவரது தந்தையின் பெயர் மாரியப்பன். அவர் இறந்து போனார். இவரது தாயார் பெயர் வீரம்மாள் (65). இவருக்கு 3 அண்ணன்களும், ஒரு தம்பியும், அழகம்மாள் என்ற ஒரு அக்காவும் உள்ளனர். அனைவரும் கூலித்தொழிலாளிகள்.

குடும்பத்தை பார்த்தால் ஸ்ரீதர் இவ்வளவு பெரிய கடத்தல்காரனாக வலம் வருவாரா? என்றுதான் எண்ணத்தோன்றும். ஆனால், ஸ்ரீதரின் பின்னணி கதைகளையும், அவருடைய குற்றச்செயல்களையும் பார்க்கும்போது பிரபல கடத்தல்காரன் என்று அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக தமிழக போலீசாரின் தூக்கத்தை கெடுத்த ஸ்ரீதர் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் சம்பந்தமாக அடிக்கடி கைதாகியிருக்கிறார். சாதாரண மோட்டார் சைக்கிள் திருடனாகத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் போலீசார் இவரை நினைத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அருப்புக்கோட்டையை சேர்ந்த ஜெயலட்சுமி, சீனியம்மாள், பார்வதி உள்பட 8 பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியை கலக்கிவிட்டது.

இந்த பெண்கள் அனைவரும் மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் சிலர் சத்துணவுக்கூடங்களில் வேலைபார்க்கிறார்கள். சில பெண்கள் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் வார்டன்களாக வேலைபார்க்கின்றனர்.

இந்த பெண்களிடம் அரசு நிதியுதவி பெற்றுத்தருவதாக ஸ்ரீதர் ஆசைகாட்டியுள்ளார். விருதுநகரில் அரசு அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர் என்றும், அவர்களை சந்தித்து மனுகொடுக்கலாம் என்றும் காரில் அழைத்து சென்றான். வழியில் ராஜபாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அனைவருக்கும் மதிய சாப்பாடு வாங்கிக்கொடுத்தார்.

அப்போது அவரது செயல்பாட்டில் சந்தேகம் கொண்ட பெண்கள் அனைவரும் அவரிடமிருந்து தப்பிக்க முயற்சித்தனர். 7 பெண்கள் தப்பி ஓடிவந்து போலீசில் புகார் கொடுத்தனர். ஜெயந்தி மட்டும் கடத்தல்காரன் ஸ்ரீதரிடம் மாட்டிக்கொண்டார்.

அவரை காரில் கடத்திச்சென்ற ஸ்ரீதர் ராஜபாளையம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டார். ஆனால் அவரை பிடித்து தள்ளிவிட்டு, ஜெயந்தி தப்பி வந்துவிட்டார்.

அவரும் ராஜபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு போலீசார் விழிப்படைந்து ஸ்ரீதரை தேட ஆரம்பித்தனர். ஸ்ரீதரைப்பற்றி விசாரித்தபோது அடுக்கடுக்காக திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.

அவர் விருதுநகர், மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோல் கடத்திச்சென்று அரசு நிதியுதவி பெற்றுத்தருவதாகவும், அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறி, பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

அவரால் கடத்திச்செல்லப்பட்ட பெண்கள் சிலரை அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.

கடத்தல்காரன் ஸ்ரீதரை ராஜபாளையம் போலீசார் தேடிவந்த நிலையில், மாணவி யமுனாவை கடத்தியபோது போலீசாரிடம் வசமாக சிக்கினார்.

ஸ்ரீதர் `மெஸ்மரிசம்' என்ற மயக்கும் கலை தெரிந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை கடத்தப்பட்டு தப்பி வந்த ஜெயந்தி போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

தன்னை ஸ்ரீதர் கடத்திச்செல்லும்போது தான் மயங்கிய நிலையில்தான் அவருடன் சென்றேன் என்றும், மயக்கம் தெளிந்தபிறகுதான் அவரிடமிருந்து தப்பி வந்தேன் என்றும் ஜெயந்தி போலீசாரிடம் கூறியிருக்கிறார்.

மதுரையில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் என்ற கண்ணனிடம் மதுரை அண்ணாநகர் உதவி கமிஷனர் வெள்ளத்துரை தீவிர விசாரணை நடத்தினார். அவர் மீது ராஜபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் பெண்கள் கடத்தல், மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 48 வழக்குகளில் அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்று வந்துள்ளார். ஒவ்வொரு வழக்கிலும் சுமார் 6 மாதம், ஓராண்டு வரை சிறை தண்டனை அனுபவித்து இருக்கிறார். 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளார். ரவுடி பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. விருதுநகர் பகுதியை சேர்ந்த பிரபல தாதா ஒருவரின் பின்னணியில் அவன் செய்யப்பட்டு வந்தாகவும் போலீசார் கருதுகிறார்கள்.


அரசு நிதிஉதவி பெற்றுத் தருவதாக ஏமாற்றி 50 பெண்களை கடத்திய வாலிபர் கைது, அரசு நிதிஉதவி பெற்றுத் தருவதாக ஏமாற்றி 50 பெண்களை கடத்திய வாலிபர் கைது, அரசு நிதிஉதவி பெற்றுத் தருவதாக ஏமாற்றி 50 பெண்களை கடத்திய வாலிபர் கைது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 3 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்து தாய் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in