tamilkurinji logo


 

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு,




செய்திகள் >>> தமிழகம்

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு

First Published : Thursday , 29th December 2011 07:53:51 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு,

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” என்ற வள்ளுவன் வாக்கின்படி, தரமான கல்வியை மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அளித்து, அதன்மூலம் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில், மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, அதிலும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, உதவித் தொகை வழங்குவது, மிதிவண்டி வழங்குவது, மடிக்கணினி வழங்குவது போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி, ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வருகிறது. மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய இனிய சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவையும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

மேலும், மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டுமானால் தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்கவேண்டும் என்பதால், ஜெயலலிதா தலைமையிலான அரசு தேவையான ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வகையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரப்படி, நடப்பு கல்வியாண்டில் அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும், கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 181 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவாகும்.

இதுமட்டுமல்லாமல், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு தக்கவாறு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி, கூடுதலாக 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 45 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவாகும்.

மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தி அவர்களை வருங்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்த்த பாடுபடும் ஆசிரியர்களின் நலன் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3,137 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் 1.6.1988க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.1988க்குப் பிறகு பணிபுரிந்த பணிக்காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை/ சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 24 கோடியே 25 லட்சத்து 44 ஆயிரத்து 210 ரூபாய் செலவு ஏற்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்கள் 6,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது கல்வித் தகுதி மற்றும் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை

6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஜெயலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 8 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், மாணவர்கள் தரமான கல்வியைப் பெற தகுந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதுடன், தகுதியானோர் ஆசிரியர் பணி பெறவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு, அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு, அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு
திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார்.

மேலும்...

 மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்
சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in