tamilkurinji logo
 

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்

First Published : Tuesday , 12th June 2018 11:00:17 AM
Last Updated : Tuesday , 12th June 2018 11:00:50 AM


ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema


ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், 21 மாதமாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் திங்கள்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக ஆட்சி இருக்கும் வரை அரசு ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற போவதில்லை. விரைவில் ஆட்சியமைக்க இருக்கும் திமுக அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றும். உண்ணாவிரத போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்த பிரச்சினையை நிச்சயமாக சட்டப்பேரவையில் எழுப்புவேன்.

மக்கள் பிரச்சினைகளை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை. அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் யாருடைய பிரச்சினைகள் குறித்தும் கவனம் கொள்வதில்லை. ஆட்சியை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பது குறித்து தான் தமிழக அரசு சிந்திக்கிறது. எம்எல்ஏக்களுக்கு மாமுல் தந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோடும் தினகரன் அணி - திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டனர். இதனால் பதவி

மேலும்...

 மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று புதைத்த பள்ளி சிறுவர்கள்
சென்னையில், பள்ளி சிறுவன் ஒருவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு, பின் சுடுகாட்டில் புதைத்து இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலையில் இப்போதுதான் உண்மை தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட ராஜேஷ் என்ற 15 வயது சிறுவனை, போலீஸ் இவ்வளவு

மேலும்...

 உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து தனியார் சொகு பேருந்து நேற்று இரவு 43 பயணிகளுடன்

மேலும்...

 2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-2019 மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். 2019 மார்ச் 14 முதல் மார்ச் 29

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in