tamilkurinji logo


 

ஆண் நண்பருடன் பழகியதற்காக 13 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> இந்தியா

ஆண் நண்பருடன் பழகியதற்காக 13 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

First Published : Monday , 12th March 2018 11:11:47 AM
Last Updated : Monday , 12th March 2018 11:11:47 AM


ஆண் நண்பருடன் பழகியதற்காக 13 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


கிழக்கு டெல்லி காரவால் பகுதியில், ஆண் நண்பருடன் சுற்றியதால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை தனது  13 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியை சேர்ந்த 40 வயது சுதேஷ்குமார் என்பவர் தனது 13 மகளை காணவில்லை என காரவால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 இதையடுத்து சிறுமி கடத்தப்பட்டதாக புகாரை பதிவு செய்து சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.

 இந்நிலையில், கடந்த வெள்ளியன்று சிறுமியின் உடலை அவரது தந்தை சுமார் 10 கிலோ மீட்டர் தொலையிலுள்ள காஜியாபாத்தின் டுரோனிகா சிட்டியின் லோனி பகுதி கழிவுநீர் கால்வாயில் இருந்து கண்டெடுத்தார்.

 இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அடக்கம் செய்வதற்காக சிறுமியின் உடலுக்கு சடங்குகள் செய்தார்.

ஆனால், போலீசாரின் சந்தேக கண் சிறுமியின் தந்தை மீது படிந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணமாக தகவல் அளித்தார்.

இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகரிக்கவே முறைப்படி விசாரித்தனர். அதன்பின் போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் தனது மகளை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி  விசாரணையின் போது சிறுமியின் தந்தை தெரிவித்த தகவல் குறித்து துணை கமிஷனர் கூறியதாவது:

  கொலை செய்யப்பட்ட சிறுமியை அவரது தந்தை சுதேஷ்குமார், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த 2 தினங்களுக்கு முன்பாக தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து அழைத்து சென்றுள்ளார்.

இது அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. அப்போது குமார் ஹெல்மெட் அணிந்து சென்றார்.

 சிசிடிவியில் பதிவாகியுள்ள ஹெல்மெட்டு, அவரது வீட்டில் உள்ள ஹெல்மெட்டுடன் ஒத்துபோனது.

எனவே, சிறுமிக்கு அவரது குடும்பத்தார் சடங்குகள் செய்யும் வரை காத்திருந்து அதன் பின் கடந்த சனிக்கிழமையன்று குமாரை கைது செய்தோம்.

விசாரணையின் போது, சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்ததை உரிய விசாரணைக்கு பின்னர் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு, பக்கத்தில் மொபைல் கடை வைத்திருக்கும் ஒருவடன் தனது மகளை அபேஷ்குமார் பார்த்துள்ளார். அதனை கண்டித்ததோடு, அந்த நபரை மேற்கொண்டு பார்க்க செல்ல கூடாது என கூறியுள்ளார். அந்த நபரையும் நேரில் சென்று குமார் எச்சரித்துள்ளார்.

ஆனால், பலமுறை எச்சரித்தும் சிறுமி அந்த நபரை சந்தித்து வந்துள்ளார். எனவே, அந்த நபருக்கு தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். இதற்காக கடந்த வியாழன்று கடைக்கு சென்று இனிப்பு(மோமோஸ்) வாங்கி வருவதாக கூறிவிட்டு சிறுமி வெளியில் சென்றுள்ளார்.

 ஆனால், அந்த நபரைத்தான் பார்க்க செல்கிறார் என சந்தேகமடைந்த அபேஷ்குமார், கையில் கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு மகளை பின்தொடர்ந்து சென்றார். அப்போது தனது மகள் அந்த நபருடன் சென்று பேசுவதை பார்த்தார்.


சிறுமியின் தந்தையை பார்த்த அந்த நபர் சிறுமியை தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அதன்பின் தனது பைக்கில் பின்னால் மகளை அமர வைத்துக்கொண்டு டுரோனிகா சிட்டி பகுதியின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுமியான தனது மகளின் கழுத்தை கத்தியால் பலமுறை அறுத்து கொடூரமாக கொலை செய்தார் .

அபேஷ் குமார். அதோடு மகளின் முகத்திலும் தாக்கியுள்ளார். அதன்பின் மகளின் உடலை வீசிவிட்டு ரத்தக்கறை படிந்த தனது உடை மற்றும் கத்தியையும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் எறிந்தபின்னர் வீட்டு திரும்பிச்சென்றார்.

அங்கு தனது குடும்பதாருடன் சென்று காரவால் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என அபேஷ் குமார் புகார் அளித்தார்.

ஆனால், தற்போது போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையால் உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார். அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.


ஆண் நண்பருடன் பழகியதற்காக 13 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஆண் நண்பருடன் பழகியதற்காக 13 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஆண் நண்பருடன் பழகியதற்காக 13 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in