tamilkurinji logo


 

ஆபாசபட விவகாரம்: மாணவி கொலையில் தாயார் கைது,




செய்திகள் >>> தமிழகம்

ஆபாசபட விவகாரம்: மாணவி கொலையில் தாயார் கைது

First Published : Monday , 26th December 2011 07:36:00 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


ஆபாசபட விவகாரம்: மாணவி கொலையில் தாயார் கைது,

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் மகள் திலகவதி. பாதிரிவேடு அரசு பள்ளியில் +1 படித்து வந்தார். விடுமுறை தினத்தில் திலகவதியை 5 மாணவர்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனை செல்போனில் படம் எடுத்து இன்டர்நெட்டில் பரவச் செய்து உள்ளனர். இது ஊருக்குள் பரவியதும் ஆத்திரம் அடைந்த மாணவியின் சித்தப்பா ஹரி, திலகவதியை கொன்று தூக்கில் தொங்கவிட்டார்.

முதலில் திலகவதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையில் அவர் சித்தப்பா ஹரியால் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதையடுத்து ஹரியை போலீசார் கைது செய்தனர்.

ஹரிக்கும், மாணவி திலகவதியின் தாய் பத்மாவுக்கும் நீண்டகாலமாக கள்ளத் தொடர்பு இருந்தது. ஆபாசபட விவகாரம் குறித்து பத்மா, ஹரியிடம் சொல்லி அழுதார். மகளின் செயலால் அவமானம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால்தான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

கள்ளக்காதலி சிந்திய கண்ணீரில் மனம் கரைந்த ஹரி, நீ சாகவேண்டாம், திலகவதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல்படுத்தி இந்த கொலையை அரங்கேற்றி உள்ளார்.

மாணவி திலகவதி கொலைக்கு அவளது தாயார் பத்மாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு சென்றபோது மனநலம் பாதித்தவர்போல் அவர் நாடகமாடினார். ஆடைகளை களைந்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் கைது செய்யாமல் போலீசார் திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று இரவு பத்மா கைது செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மகளை கொலை செய்ய கள்ளக்காதலனை தூண்டியதாக பத்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாசபட விவகாரம்: மாணவி கொலையில் தாயார் கைது, ஆபாசபட விவகாரம்: மாணவி கொலையில் தாயார் கைது, ஆபாசபட விவகாரம்: மாணவி கொலையில் தாயார் கைது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 3 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்து தாய் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண்

மேலும்...

 மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்
சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி

மேலும்...

 பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in