இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.

எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் கோரக்பூர் தொகுதி மற்றும் புல்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி  அமோக வெற்றி பெற்றது.

உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு, இடைத்தேர்தலில் கிடைத்த தோல்வி பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

“ புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

 இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும். சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ்வாதி கூட்டணியை குறைத்து மதிப்பிட்டதும் தோல்விக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

https://goo.gl/GFcecG






27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்