இன்டர்நெட் பயன்படுத்துவது இந்தியாவில் 12.5 கோடி பேர்

இன்டர்நெட் பயன்படுத்துவது இந்தியாவில் 12.5 கோடி பேர்
உலக அளவில் இன்டர்நெட் சந்தை வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக 12.5 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்டர்நெட் பயன்பாடு குறித்து தொழில் வர்த்தக அமைப்பான அசோசேம், காம்ஸ்கோர் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடத்தியது. இதன் முடிவு குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பாண்டில் 1.4 கோடி உயர்ந்துள்ளது. ஜூலை மாத கணக்குப்படி, அங்கு 33.6 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, ரஷ்யா, இந்தியா நாடுகளில் இன்டர்நெட் பயன்பாடு வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த வளர்ச்சியில் உலக அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா உள்ளது.  

இந்தியாவில் தற்போது 12.5 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 1.8 கோடி பேர் அதிகரித்திருக்கின்றனர். நெட் பயன்படுத்துவோரில் 75 சதவீதம் பேர் 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்டர்நெட்டில் பெரும்பாலும் தேடுதல், சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு, செய்தி வலைதளங்களே பயன்படுத்தப்படுகின்றன.

அதே போல், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மிக அதிகமாக காணப்படுகிறது. நெட் பயன்படுத்தும் 5 பேரில் ஒருவர், ரயில்வே வெப்சைட் பார்க்கிறார் என தெரிய வருகிறது. ரயில்வே துறைக்கு ஆன்லைன் பரிமாற்றத்தின் சராசரி ரூ.1700 ஆக உள்ளது. ஆன்லைன் சில்லரை விற்பனையும் 60 சதவீத அளவுக்கு வேகமாக வளர்ந்திருக்கிறது. இந்த ஆண்டில் 3.75 கோடி பேர் ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டியிருக்கின்றனர். இதில் 13.4 சதவீதம் பேர் துணி வகைகளை தேடியுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://goo.gl/HFMNZC


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்