இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதையும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவரது பொதுநல வழக்கில் “சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதவர்கள் அதிகம் செல்கின்றனர். இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வதும் அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி சீட் பெல்ட், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்கிற சட்டம் உள்ளது.

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை; இனி உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடப்போம்: பேரவையில் முதல்வர் பதில்
இதைத் தீவிரமாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு சீட் பெல்ட் அணியாமல் செல்வதாலும், ஹெல்மெட் அணியாமல் செல்வதாலும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க கட்டாயம் மேற்கண்ட விதிகளை அமல்படுத்தவேண்டும் என்பதை அரசுக்கு உத்தரவாக பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பாவானி சுப்பராயன் அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக கண்காணிக்கப்பட்டு அதற்கான அபராதம் மற்றும் தண்டனை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், சாலை விதிகளை மீறுபவர்கள் அதிகரித்து வருவதாகவும், சாலை விதிகளை மதிக்காத போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.


சீட் பெல்ட் அணிவது, ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை உறுதிப்படுத்தவேண்டும், இருசக்கர வாகனங்களில் கார்களில் நிறுவனங்கள் அளித்துள்ள முகப்பு விளக்குகளை மாற்றி, அதிக ஒளி உமிழும் எல்.ஈ.டி பல்புகளைப் பொருத்துவதும், முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டவேண்டும் என்ற விதியையும் மீறுவதையும் கண்காணித்து சாலை விதிகளை முறையாக அமல்படுத்தப்படவேண்டும்.

விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும், ஹெல்மெட் அணிவது என்பது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இருவருமே அணியவேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இந்த உத்தரவுகளை அமல்படுத்துவது தொடர்பான விரிவான அறிக்கையை தமிழக அரசு வரும் 27-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
https://goo.gl/vdTXXu






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது