இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு

இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு
கேரளாவில் தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு  தொடர்பு உள்ளதாக பெண்ணின் கணவன் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராய்.  துபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மெர்சி. திருமணத்திற்கு முன்பு தூரத்து உறவினரான ஒரு பாதிரியார் மெர்சியை பலமுறை பலாத்காரம்  செய்துள்ளார்.

திருமணம் முடிந்த பின்னர் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபையின் கீழ் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று பாதிரியாரிடம், முன்பு நடந்த  சம்பவத்தை கூறி பாவமன்னிப்பு வேண்டினார்.

இதை கேட்ட பாதிரியார், கணவரிடம் சம்பவத்தை கூறுவேன் என்று மிரட்டி அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை கேமராவில் பதிவு  செய்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டி மேலும் 4 பாதிரியார்கள் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.  இது ராய்க்கு தெரிய வந்தது.

இது  குறித்து அவர், மலங்கரை கத்தோலிக்க சபை பிஷப்பிடம் புகார் செய்தார். இதையடுத்து நிரணம் சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ்,  ஜோப்மாத்யூ, ஜிஜோ ஜெ.ஆபிரகாம், தும்பமண் சபையை சேர்ந்த பாதிரியார் ஜாண்சன் வி.மேத்யூ, டெல்லி சபையை சேர்ந்த ஜெய்ஸ் ஜெ.ஜார்ஜ் ஆகிய 5  பாதிரியார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மெர்சியின் கணவர் ராய் கூறுகையில், ‘‘எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது 5 பாதிரியார்கள் என கருதினேன். ஆனால்  மேலும் 3 பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது.

இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.  பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும் என்றார்.
https://goo.gl/nTrqbd






27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்