tamilkurinji logo


 

உயிருடன் உள்ள பாம்புகளை சாப்பிடும் தொழிலாளி!,




செய்திகள் >>> இந்தியா

உயிருடன் உள்ள பாம்புகளை சாப்பிடும் தொழிலாளி!

First Published : Sunday , 14th February 2010 10:21:09 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

உயிருடன் உள்ள பாம்புகளை சாப்பிடும் தொழிலாளி!,

உ.பி.,யைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, கடந்த 20 ஆண்டுகளாக உயிருடன் உள்ள பாம்புகளை உணவாக சாப்பிடும் வினோதமான பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். சீதாபூர் மாவட்டத்தில் சுரய்ச்சா என்ற குக்கிராமம் உள்ளது. இங்கு ஒரு எஸ்டேட்டில் நன்கு (44) என்ற தொழிலாளி பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இவர் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். விரக்தி அடைந்த அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஒரு விஷப் பாம்பை அடித்துக் கொன்று, அதை வேக வைத்து சாப்பிட்டார். விஷமுடைய பாம்பை சாப்பிட்டால் இறந்து விடுவோம் என்று நினைத்தார். ஆனால், அவர் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.

இது, அவருக்கே ஆச்சர்யத்தை அளித்தது. இதற்கு பின், தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், தொடர்ச்சியாக பாம்புகளை பிடித்து, சமைத்து சாப்பிடத் துவங்கினார். சில நாட்களிலேயே செத்த பாம்புகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் உயிருடன் பாம்புகளை பிடித்துச் சாப்பிடத் துவங்கினார். அப்போதும், இவருக்கு எதுவும் ஆகவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக உயிருடன் உள்ள பாம்பு தான், அவரது வழக்கமான உணவாகி விட்டது. பசி எடுத்தால், கிராமத்தில் அருகே உள்ள வயல்வெளிகளுக்கு சென்று, புதர்களுக்குள்ளிருந்து ஏதாவது ஒரு பாம்பை பிடித்து வந்து விடுகிறார். அன்றைய தினம், பாம்பு தான் அவரது மதிய உணவு.

இதனால், இப்போதெல்லாம், சுரய்ச்சா கிராம மக்கள், தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு பாம்பு வந்தால், பயப்படுவது இல்லை. உடனே நன்குவை கூப்பிடுகிறார்கள். கிராமத்தில் உள்ள குழந்தைகளும் நன்குவை "பாம்பு மாமா' என்று தான் பாசத்துடன் அழைக்கின்றன.

சீதாபூர் மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சரத் சந்திரா கூறுகையில், "இது ஒன்றும் புது விஷயமல்ல. அசாம், மணிப்பூர் போன்ற வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சிலர், பாம்புகளை உயிருடன் சர்வ சாதாரணமாக, பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகின்றனர்" என்றார்.

உயிருடன் உள்ள பாம்புகளை சாப்பிடும் தொழிலாளி!, உயிருடன் உள்ள பாம்புகளை சாப்பிடும் தொழிலாளி!, உயிருடன் உள்ள பாம்புகளை சாப்பிடும் தொழிலாளி!,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in