உலக அளவில், எல்.சி.டீ. டி.வி. விற்பனை வளர்ச்சி சரிவடையும்

உலக அளவில், எல்.சி.டீ. டி.வி. விற்பனை வளர்ச்சி சரிவடையும்
சர்வதேச அளவில், நடப்பு 2012-ஆம் அண்டில் எல்.சி.டீ. டி.வி. விற்பனை சரிவடையும் என என்.பி.டீ. டிஸ்பிளே சேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய திரை கொண்ட டி.வி. பெட்டிகள், எல்.இ.டீ. மற்றும் 3டீ டி.வி. போன்ற நவீன தொலைக்காட்சிப் பெட்டிகளின் ஆதிக்கம் காரணமாக எல்.சி.டீ. பிரிவு கடும் போட்டிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிகிறது.

நடப்பு ஆண்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒட்டுமொத்த விற்பனை 1.4 சதவீதம் குறைந்து 24.50 கோடியை எட்டும் என தெரிகிறது. அதே சமயம் எல்.சி.டீ. டி.வி. விற்பனை 5 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் 2011-ஆம் ஆண்டில் இவ் வகை டி.வி.களின் விற்பனை 7 சதவீதம் வளர்ச்சி கண்டு 21.60 கோடியாக உயர்ந் திருந்தது.

தொலைக்காட்சிப் பெட்டிகளின் விலை எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை. மேலும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் நுகர்வோர் சிக்கனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். நடப்பு ஆண்டில் ஒரு எல்.சி.டீ. டி.வி.யின் சராசரி விற்பனை விலை 4 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நடந்த 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் இவ்வகை டி.வி. பெட்டிகளின் விலை முறையே 10 சதவீதம் மற்றும் 6 சதவீதம் குறைந்திருந்தது.

இந்தியாவில் அண்மைக் காலத்தில் எல்.சி.டீ. டி.வி. விலை 3-5 சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது. பல நிறுவனங்கள் தேவையான உதிரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன. ரூபாய் வெளிமதிப்பு சரிவால் இந்த நிறுவனங்களின் இறக்குமதி செலவினம் கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

நடப்பாண்டில் எல்.சி.டீ. விற்பனை வளர்ச்சி சரிவடையும் என்றாலும் பெரிய திரை டி.வி. மற்றும் எல்.இ.டீ. டி.வி. மற்றும் 3டீ டி.வி. விற்பனை அமோகமாக இருக்கும் என என்.பி.டீ. டிஸ்பிளே சேர்ச் நிறுவனம் முன்னறிவிப்பு செய்துள்ளது. திரையரங்குகளில் படம் பார்ப் பதற்கு இணையான பரவச உணர்வூட்டுவதால் இந்த நவீன தொலைக்காட்சிப் பெட்டிகளின் செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
https://goo.gl/yuBwfz


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்