உலக அளவில் மிளகு விலை சரிவு

உலக அளவில் மிளகு விலை சரிவு
சர்வதேச அளவில், மிளகு உற்பத்தி நன்கு இருப்பதை அடுத்து, இதன் விலை, நடப்பு மற்றும் முன்பேர சந்தைகளில் குறைந்து வருகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக, நவம்பர், டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான, முன்பேர வர்த்தகத்தில், மிளகின் விலை, குவிண்டாலுக்கு, முறையே, 1,370 ரூபாய், 935 ரூபாய் மற்றும், 1,260 ரூபாய் குறைந்துள்ளது.

இதையடுத்து, நவம்பர் மாத விற்பனைக்கான மிளகின் விலை, 42,650 ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது, டிசம்பர் மாதத்திற்கு, 42,450 ரூபாய்க்கும், மற்றும் பிப்ரவரி மாதத்திற்கு, 37,600 ரூபாய்க்கும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது, வரும் மாதங்களில், மிளகு விலை குறைவதற்கான வாய்ப்பை பிரதிபலிப்பதாக உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.நடப்பு, 2012ம் ஆண்டில், சர்வதேச அளவிலான மிளகு உற்பத்தி, 3.27 லட்சம் டன்னாக இருக்கும். இந்நிலையில், கையிருப்பு அதிகமாக உள்ளதால், இதன் ஏற்றுமதிக்கான உபரி, 3.36 லட்சம் டன்னாக இருக்கும் என, சர்வதேச மிளகு கூட்டமைப்பு (ஐ.பி.சி.,) மதிப்பிட்டுள்ளது.

மேலும், இது வரும், 2013ம் ஆண்டில், முறையே 3.17 லட்சம் டன் மற்றும் 3.19 லட்சம் டன் என்ற அளவில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது நடப்பு, 2012ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மிளகு உற்பத்தி, 43 ஆயிரம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதன் கையிருப்பு, 15,816 டன் என்ற அளவிலும், இறக்குமதி, 16,250 டன் என்ற அளவிலும் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின், மிளகு இறக்குமதி, ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், கடந்த ஆண்டின், இதே காலத்தை விட, 21.56 சதவீதம் அதிகரித்து, 9,651 டன்னிலிருந்து, 11,732 டன்னாக உயர்ந்துள்ளது.அதேசமயம், இதே காலத்தில், இதன் ஏற்றுமதி, 5.27 சதவீதம் அளவிற்கே உயர்ந்து, 13,291 டன்னிலிருந்து, 13,992 டன்னாக சற்று அதிகரித்துள்ளது.

மிளகினை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி, மறு ஏற்றுமதி மேற்கொள்வதன் காரணமாகவே, இறக்குமதி மிகவும் அதிகரித்து காணப்படுகிறது என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.அதேசமயம், உள்நாட்டில் இதற்கான தேவை, 42,500 டன்னாகவும், ஏற்றுமதி, 17,500 டன்னாகவும் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.வரும், 2013ம் ஆண்டில்,

நாட்டின் மிளகு உற்பத்தி, 55 ஆயிரம் டன்னாகவும், கையிருப்பு, 15 ஆயிரம் டன்னாகவும் இருக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், உள்நாட்டில் இதன் பயன்பாடு, 43 ஆயிரம் டன்னாகவும், ஏற்றுமதி, 25 ஆயிரம் டன்னாகவும் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில், வியட்நாம் நாடு, அதன் ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில், இந்தோனேஷியாவிலிருந்து, அதிகளவில் மிளகு இறக்குமதி மேற்கொள்ள படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தோனேஷியாநடப்பு, 2012ம் ஆண்டில்,

இந்தோனேஷியாவின் மிளகு உற்பத்தி, 45 ஆயிரம் டன்னிலிருந்து, 63 ஆயிரம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதன் ஏற்றுமதியும், 36,487 டன்னிலிருந்து, 62,614 டன்னாக அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், வரும் 2013ம் ஆண்டில், இந்நாட்டின் மிளகு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி முறையே, 47 ஆயிரம் டன் மற்றும், 43,614 டன் என்ற குறைந்த அளவில்தான் இருக்கும் என, ஐ.பி.சி., மேலும் தெரிவித்துள்ளது.
https://goo.gl/vTtra8


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்