உலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு

உலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளதை புனேயில் உள்ள தேசிய வைரலாஜி சோதனைக்கூடும் உறுதி செய்துள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பலர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

கோழிகோடு மாவட்டம், பெரும்பரா பகுதியில் உள்ள சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தான் முதலில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. கடும் காய்ச்சல் ஏற்பட்டு இவர்கள் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் தற்போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த செவிலியர் லினி (வயது 31) பெரும்பரா தாலுகா மருத்துமனையில் பணி புரிந்து வந்தார். அப்போது நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். அவருக்கு சிகிச்சையளித்த செவலியர் லினி பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், நிபா வைரஸ் பாதிப்பால் உயிரழந்தது தற்போது உறுதியாகியுள்ளது.

பெரும்பராவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அவர்கள் உறவினர்கள் இருவரும், சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் என ஆக மொத்தம் 6 பேர் அந்த பகுதியில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் நிபா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்துள்ளதை கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜா கூறுகையில் ‘‘கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் தாக்கில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் தாக்குதல் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரி புனேயில் உள்ள தேசிய வைராலஜி சோதனைக் கூடத்தில் சோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ எனக் கூறினார்.

நிபா வைரஸ் தாக்குதல் தெரிந்தால் 0495-2376063 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறு கேரள அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுமட்டுமின்றி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதித்து மேலும் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சிலர் இறந்துள்ளதாகவும் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் மரணத்திற்கு நிபா வைரஸ் காரணமா? என கேரள அரசு விசாரணை நடத்தி வருகிறது. இது உறுதி செய்யப்பட்டால் மரணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது.
https://goo.gl/DTk8K6


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை