tamilkurinji logo


 

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்

First Published : Monday , 18th June 2018 01:50:30 PM
Last Updated : Monday , 18th June 2018 01:50:30 PM


உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து தனியார் சொகு பேருந்து நேற்று இரவு 43 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டது. இன்று அதிகாலை அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை பாலி போலீஸ் சிறப்பு காவல்படை எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து வந்த மற்றொரு தனியார் சொகுசு பேருந்து திடீரென பின்னால் மோதியது. இதில், 2 சொகுசு பேருந்துகளும் நிலைதடுமாறி அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தன.

இந்த விபத்தில் களியக்காவிளையில் இருந்து வந்த சொகுசு பேருந்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வெங்கடேஷ், அவரது மனைவி ராணி, திருநெல்வேலியை சேர்ந்த சாலி, மதுரை ஜியா, ஓட்டுநர் முருகன் உள்பட 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடன்குடியில் இருந்து வந்த பேருந்தில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

விபத்தில் காயமடைந்த 20 பேரரும் உளுந்தூர்பேட்டை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் பலத்த சேதமடைந்த 2 பேருந்துகளும் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து எடைக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in