tamilkurinji logo


 

எனது நிர்வாண ஸ்கேனில் ஆட்டோகிராப் போட்டேன்..!- ஷாருக்கான் ,
செய்திகள் >>> இந்தியா

எனது நிர்வாண ஸ்கேனில் ஆட்டோகிராப் போட்டேன்..!- ஷாருக்கான்

First Published : Friday , 12th February 2010 10:38:35 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PMலண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரிட்டனில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தீவிரவாத அச்சுறுத்தலைத் தடுக்கவும் பிரிட்டனின் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் வெளிநாட்டவர்களை முழு உடல் ஸ்கேன் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரிட்டன் சென்றிருந்த ஷாருக்கானையும் இந்த இரு விமான நிலையங்களிலும் ஸ்கேன் செய்துள்ளனர். ஸ்கேன் செய்யும் போது முழு உடலும் நிர்வாணமாகவே திரையில் தோன்றும். இதனை எடுத்துப் பார்த்து பின்னர் அழித்துவிடுவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது.

ஷாரூக்கானும் இந்த சோதனைக்குட்படுத்தப்பட்டார். பின்னர் அவரது உடலின் ஸ்கேன் படங்களை இரு பெண் அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து ஷாருக் கூறுகையில், "தன் உடலை நிர்வாணமாக ஸ்கேன் செய்த படத்தை, அதுவும் இரு பெண்களுக்கு முன்னால் பார்ப்பது யாருக்கும் தர்மசங்கடம்தான். எனக்கும் அப்படி இருந்தது. இருந்தாலும் அதைக் காட்ட முடியாதே. காரணம் எனது பெயர். இந்தப் பெயருக்காகவே அனைத்து விமான நிலையங்களிலும் நான் தடுக்கப்படுகிறேன். இது பழகிப்போக ஆரம்பித்துவிட்டது. மத ரீதியான அவமானப்படுத்தல்களுக்கு முன் ஒரு தனி மனிதனின் சுதந்திரம், உரிமை என்பதெல்லாம் பெரிய விஷயமா என்ன...

இந்த ஸ்கேன் படங்களைக் காட்டிய பெண் அதிகாரிகளுக்கு பதிலாக, அந்த ஸ்கேன் படத்திலேயே எனது கையெழுத்தை ஆட்டோகிராபாக போட்டுவிட்டு வந்தேன்" என்றார் ஷாருக், கோபமும் நக்கலும் கலந்த தொனியில்.

ஷாருக்கான் தனது இந்த அனுபவத்தையே பிபிசி காமெடி ஷோவிலும் தெரிவித்தார். உடனே ஷாரூக்கானின் இந்த பேச்சுக்கு பிரிட்டிஷ் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த மாதிரி ஸ்கேன் படங்களை யாருக்கும் காட்டுவதில்லை. இரண்டு நிமிடங்களுக்குள் அழித்துவிடுவதுதான் அங்குள்ள நடைமுறை. எனவே படங்களை அவர் பார்த்திருக்க முடியாது என்று கூறியுள்ளது.

ஆனால் ஷாருக் தான் சொன்னது உண்மையே என்றும் அதற்கு ஆதாரமாக அந்த ஸ்கேன் படங்களின் நகல்களையும் வெளியிட்டுள்ளார்.

எனது நிர்வாண ஸ்கேனில் ஆட்டோகிராப் போட்டேன்..!- ஷாருக்கான் , எனது நிர்வாண ஸ்கேனில் ஆட்டோகிராப் போட்டேன்..!- ஷாருக்கான் , எனது நிர்வாண ஸ்கேனில் ஆட்டோகிராப் போட்டேன்..!- ஷாருக்கான் ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in