என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்

என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்:  கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கிறிஸ் கெய்லை ஏலம் எடுத்த சேவாக், கெய்ல் 2-3 போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்தால் கூட அவர் மீது செய்த முதலீட்டை திரும்ப எடுத்து விடுவோம் என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் கெய்ல் கடந்த 2 போட்டிகளில் வெற்றிகர இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார்.

அவர் இது குறித்துக் கூறியபோது, “நான் எப்போதும் உறுதியுடன் ஆடுவேன், உலகில் எங்கு சென்று எந்த அணிக்கு ஆடினாலும் என் உறுதியில் மாற்றமில்லை.

நிறைய பேர் கிறிஸ் கெய்ல் நிரூபிக்க வேண்டும் என்று. விரேந்திர சேவாக் என்னை ஏலம் எடுத்து ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்.

‘கிறிஸ் ஓரிரு போட்டிகளை வென்றால் அவர் மேல் இட்ட முதலீட்டுக்கான பெறுமானம் இருக்கும்’ என்று ஒரு நேர்காணலில் சேவாக் கூறியிருந்தார், அவரிடம் இது குறித்து பேச வேண்டும்.

இங்கு சதம் எடுத்ததில் மகிழ்ச்சி. இந்தப் பிட்சை மிஸ் செய்கிறேன், காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க இங்கு வரவில்லை.

கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்.” இவ்வாறு கூறினார் கிறிஸ் கெய்ல்.
https://goo.gl/EAmFn6


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை