ஐ.டி., பீ.பி.ஓ. துறைகளால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு

ஐ.டி., பீ.பி.ஓ. துறைகளால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு
ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. துறைகளால் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2012 ஜூன் வரையிலான ஓர் ஆண்டு காலத்தில் வேலைவாய்ப்புகள் ஏழு லட்சம் அளவிற்கு அதிகரித்துள்ளது என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. துறைகளின் பங்கு ஏறக்குறைய 50 சதவீதமாக உள்ளது.

பாராளுமன்ற மக்களவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார மந்தநிலையிலும் 2009 ஜூன் மாதத்திலிருந்து வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தார். உலகில் உழைக்கும் வயதுள்ள இளைஞர்களை அதிகம் கொண்ட பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதை ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

துறைவாரியாக பார்க்கும்போது, 2011 ஜூன் முதல் 2012 ஜூன் வரை ஜவுளி துறை (ஆயத்த ஆடைகள் உள்பட) 1.70 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கி முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக போக்குவரத்து துறை 45,000 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலோக துறை 26,000 பேருக்கும், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் துறை 19,000 பேருக்கும், மோட்டார் வாகன துறை 11,000 பேருக்கும் பணி வாய்ப்பு அளித்துள்ளன. எனினும் கைத்தறி, விசைத்தறி மற்றும் தோல் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு சரிவடைந்துள்ளது.

வேலைவாய்ப்பு வழங்குவதில் பொது மற்றும் தனியார் துறை இரண்டிலுமே சிறப்பான வளர்சி காணப்படுகிறது. இந்த வகையில், 2012 ஜூன் வரையிலான 11 காலாண்டுகளில் ஒட்டுமொத்த அளவில் 30.73 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், 2011 முதல் 2016 வரையிலான காலத்தில் உழைக்கும் வயதுள்ளோர் படையில் 6.35 கோடி புதியவர்கள் இணைவார்கள் என்றும், இதில் பெரும்பாலானோர் 20 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களாக இருப்பார்கள் என்றும் ஆய்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.

2011–ஆம் ஆண்டில், தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஆண்டு வளர்ச்சி விகிதம் 5.6 சதவீதமாக இருந்தது. ஆனால் பொது துறையில் வேலைவாய்ப்புகள் சரிவடைந்தன. 2009–2011 ஆண்டு காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பெண்கள் 20.5 சதவீத பங்கினை கொண்டிருந்தனர். அண்மைக் காலம் வரை இதில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
https://goo.gl/9sT5oC


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்