ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு
ஆந்திரா சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

 ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

 மக்களவையில் 9 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு உள்ளனர்.


பாஜக அரசு  மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸையும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில், பதவியை ராஜினாமா செய்வார்கள் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னதாக ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பதே தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.


இந்த பிரச்னையை முன்வைத்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் ஏற்கனவே இந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ளன.

ஆந்திரா சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மக்களவையில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர தெலுங்கு தேச கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முயற்சித்த போது அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அது கைகூடவில்லை.

பிறகு மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு நாடாளுமன்றத்தில் முயற்சித்த போதும் கூச்சல் குழப்பத்தால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில், பதவியை ராஜினாமா செய்வார்கள் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்களும் இந்த முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
https://goo.gl/XjfWfn


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை