tamilkurinji logo
 

ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க. வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்,/In-madhya pradesh-a-older-men-worn-sleeper-wreath

/In-madhya,pradesh-a-older-men-worn-sleeper-wreath



செய்திகள் >>> இந்தியா

ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க. வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்

First Published : Tuesday , 9th January 2018 07:25:56 PM
Last Updated : Tuesday , 9th January 2018 07:25:56 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282

ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க.  வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்,/In-madhya pradesh-a-older-men-worn-sleeper-wreath

 மத்திய பிரதேச மாநிலத்தில் சில உள்ளாட்சி அமைப்பு பதவி இடங்கள் காலியாக உள்ளன.

அந்த இடங்களுக்கு வருகிற 17-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அந்த உள்ளாட்சி இடங்களில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

தகர் மாவட்டம் தாமோத் என்னும் இடத்தில் காலியாக உள்ள இடத்திற்கு பா.ஜ.க. சார்பில் தினேஷ் சர்மா என்பவர் போட்டியிடுகிறார்.அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று மாலை அவர் தனது தொகுதிக்குட்பட்ட ஒரு வார்டில் ஓட்டு கேட்க சென்றார். அப்போது நிறைய பேர் அவரை வரவேற்று மாலைகள் அணிவித்தனர். அவர்களுக்கு தினேஷ் சர்மா நன்றி சொல்லி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் பா.ஜ.க. வேட்பாளர் தினேஷ் சர்மாவுக்கு திடீரென செருப்பு மாலையை அணிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினேஷ் சர்மாவுக்கும் அந்த முதியவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அந்த முதியவர் கூறுகையில், இந்த தெருவிற்கு இதுவரை நீங்கள் குடிநீர் வசதியோ, சாலை வசதியோ எதுவுமே செய்து தரவில்லை. எனவேதான் செருப்பு மாலை அணிவித்தேன் என்றார்.

இதை கேட்டதும் வேட்பாளர் தினேஷ் சர்மா மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மத்திய பிரதேசத்தில் வைரலாக பரவி வருகிறது.


ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க.  வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்,/In-madhya pradesh-a-older-men-worn-sleeper-wreath ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க.  வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்,/In-madhya pradesh-a-older-men-worn-sleeper-wreath ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க.  வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்,/In-madhya pradesh-a-older-men-worn-sleeper-wreath
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை
புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு

மேலும்...

 பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்
பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in