கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் தற்கொலை

கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் தற்கொலை
கரூர் மாவட்டம், க.பரமத்தி பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ், அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் அருள் பிரகாசம் (வயது 12). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அருள் பிரகாசம் வீட்டிற்கு சென்றான். அப்போது வீட்டில் யாரும் இல்லாததையடுத்து திடீரென உத்திரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு அருள் பிரகாசம் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு க.பரமத்தி போலீசார் சென்றனர். பின்னர் அருள் பிரகாசத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது அருள் பிரகாசம் எழுதிய கடிதம் ஒன்று அவனது சட்டைப்பையில் இருந்தது. அதில், எனது சாவுக்கு பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் ஆகியோர்தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் மற்றும் அரவக்குறிச்சி தாசில்தார் பிரபு, க.பரமத்தி வருவாய் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பள்ளிக்கு சென்று, மாணவன் அருள்பிரகாசை ஆசிரியர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் திட்டினார்களா? அடித்து துன்புறுத்தினார்களா? என்று விசாரித்தனர்.

அருள்பிரகாசம் கபடி விளையாடுவதில் ஆர்வமுடையவனாக இருந்தான். அந்த வகையில் விளையாடும் போது தகராறு ஏதும் ஏற்பட்டு அதில் மாணவன் மனமுடைந்தானா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அருள் பிரகாசம் சாவுக்கான காரணம் என்ன? என்பது பற்றிய உண்மை நிலையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவனது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் விசாரணை மேற்கொண்ட போது, விளையாட்டின் போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு பெற்றோரை அழைத்து வருமாறு தான் அருள் பிரகாசை அறிவுறுத்தினோம். ஆனால் திடீரென அவன் தற்கொலை செய்தது எதிர்பாராமல் நடந்தது என பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்பிரகாசத்தின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://goo.gl/SDxp8g


17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்