tamilkurinji logo


 

கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி எச்சரிக்கை,\"Will Decide Future Action After By-Elections Are Announced\": MK Alagiri

\"Will,Decide,Future,Action,After,By-Elections,Are,Announced\":,MK,Alagiri




செய்திகள் >>> தமிழகம்

கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி எச்சரிக்கை

First Published : Monday , 27th August 2018 02:54:10 PM
Last Updated : Monday , 27th August 2018 02:54:10 PM


கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி எச்சரிக்கை,\

திமுகவில் தம்மை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதி மறைந்து ஒருவாரம் முடியும் முன்பே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி, கட்சி ரீதியாக திமுகவில் தனக்கு ஆதங்கம் இருப்பதாகவும், அதனை நேரம் வரும்போது தெரிவிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தம் ஆதரவாளர்களைத் திரட்டி கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார். இதையடுத்து, மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் அழகிரி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தொடர்ந்து திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் எதிரான கருத்துகளையும் கூறி வருகிறார்.

இந்நிலையில், மதுரையில் மு.க.அழகிரி திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எட்டு ஆண்டுகளாக இல்லாமல் இப்போது ஏன் திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்த மு.க.அழகிரி, “அப்போது கலைஞர் உயிருடன் இருந்தார். கலைஞர் உயிருடன் இருந்தபோது என்னை திமுகவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினார்.


ஆனால், அந்த முடிவை சிலர் தடுத்துள்ளனர். கலைஞர் இப்போது இல்லை. திமுகவை காப்பாற்ற வேண்டும். அவர்கள் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தெரிவித்தார்.

மேலும், தமது தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரணி குறித்து கூறிய அழகிரி, “தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எனது தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள அனைத்து தொண்டர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இது தொண்டர்களின் முயற்சிதான். என் தலைமையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்” என கூறினார்.

கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி எச்சரிக்கை,\ கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி எச்சரிக்கை,\ கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி எச்சரிக்கை,\
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி
திமுகவில் சேர தொடர்ந்து மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அழகிரி, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள், ஏன் சேர்க்கவில்லை என்று கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று காட்டமுடன் தெரிவித்தார்.திமுகவில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சி

மேலும்...

 திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு
திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார்.

மேலும்...

 பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in