tamilkurinji logo


 

கண்டங்கத்தரியின் மருத்துவ குணம்,Medical nature of kandankathari

Medical,nature,of,kandankathari




கண்டங்கத்தரியின் மருத்துவ குணம்

First Published : Monday , 19th August 2013 11:04:54 PM
Last Updated : Monday , 19th August 2013 11:04:54 PM


கண்டங்கத்தரியின் மருத்துவ குணம்,Medical nature of kandankathari

இது சளியைக் கரைப்பதோடல்லாமல் நீரைப் பெருக்கும் ஆற்றலுமுள்ளது. வீக்கத்தைக் கரைக்கும் சக்தியும் கண்டங்கத்திரிக்கு உண்டு. மேலும் கப சம்பந்தப்பட்ட காய்ச்சலைத் தணிக்கும்.

* கண்டங்கத்திரிச்  செடி முள் நிரம்பியது. பூ நீலநிறமுடையது. காய் சுண்டைக்காயைப் போன்று பச்சையாகவும், பழம் மஞ்சளாகவும், சில வெண்மையாகவும் சுண்டைக்காய்ப் பருமன் ஆகவும் இருக்கும்.

* கண்டங்கத்திரி இலைச்சாற்றுடன் அல்லது  சமஅளவு நல்லெண்ணெய் கூட்டிப் பதமுறக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைவலி, அக்குள் துர்நாற்றம், கீழ் வாதம் முதலியவைகளுக்கு மேற்பூசி்த் தேய்க்கக் குணமாகும்.

* கண்டங்கத்திரி இலைச்சாற்றுடன் ஆளி விதை எண்ணெய் கூட்டிப் பதமாகக் காய்ச்சிக் கை கால்களில் வரும் வெடிப்புகளுக்குப் பூசிவர விரைவில் அவை குணமாகும்.

* கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் இவைகளை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீ ர் ஊற்றி சுண்டக் காய்ச்சி காலை, மாலை கொடுத்து வரக் கப சம்பந்தமான காய்ச்சல் குணமாகும்.

* இக்காயைச் சுண்டைக்காய் போன்று குழம்பிலிட்டு அளவாக அருந்தினால் பசியை  அதிகப்படுத்தும். கபரோகிகளுக்கு மிகுந்த நன்மையைத் தரும்.

* கண்டங்கத்திரிப் பழத்தை மண்பாண்டத்தில் போட்டு தண்ணீ ர் விட்டு வேகவைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் கூட்டி மெழுகு பதம் வரக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.  இந்த கலவையை வெண் குஷ்டத்திற்கு மேல் தடவி வர குணமாகும். இதை காதில் இரண்டு சொட்டு விட்டு வர காது நோய் குணமாகும்.

* கண்டங்கத்திரிச் செடியைப் பச்சையாகக் கொண்டு வந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீ ர் ஊற்றி சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலை மட்டும் கொடுத்து வர உடலில் நீரேற்றம், சூணாம் வயிறு, உடல் வீக்கத்துடன் காய்ச்சல் ஆகியவை குணமாகும்.


கண்டங்கத்தரியின் மருத்துவ குணம்,Medical nature of kandankathari கண்டங்கத்தரியின் மருத்துவ குணம்,Medical nature of kandankathari கண்டங்கத்தரியின் மருத்துவ குணம்,Medical nature of kandankathari
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி பழம் மருத்துவ குறிப்பு
தேவையான பொருட்கள்:  பப்பாளி பழத்தை   மிக்சியில்   போட்டு   நன்கு  அரைத்து    2 ஸ்பூன்  அளவுக்கு எடுக்கவும். இதனுடன்  அரை   ஸ்பூன்   சீரகப்பொடி சேர்க்கவும். இரண்டும்   சேர்த்து   ஒரு டம்ளர்    நீர்  விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு    வந்தால் 

மேலும்...

 இலைகளின் மருத்துவ குணம்
மூங்கில் இலை சாம்பலில் பல்தேய்த்தால் பற்களில் உள்ள கறை நீங்கும்.துளசி கசாயம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.தினமும் வாழை இலையில் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் இருக்கலாம். தோல் பளபளக்கும். பித்தத்தை சமபடுத்தும்.

மேலும்...

 கீழா நெல்லி மருத்துவ குணம்
 கீழாநெல்லி இலை, கரிசாலங்கண்ணி இலை, தும்பை இலை மூன்றும் சம அளவு எடுத்து அம்மியில் அரைத்துக் காய்ச்சிய பசும் பாலில் பெரியவர்களுக்குப், சிறியவர்களுக்கு, குழந்தைகளுக்குச்  காலையில் மட்டும் ஒரு வாரம் முதல் 10 நாள் தரவும். * உணவு காரம், புளி

மேலும்...

 வல்லாரை கீரையின் மருத்துவ குணங்களும் பயன்களும்
வல்லாரைய அதிகப் பேர்விரும்பிச் உண்பார்கள் காரணம் அதன் சுவை மட்டுல்ல மருத்துவத்திற்கு சிறந்த கீரை வகையாகும்.வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரத்திற்கு இருமுறையேனும் பயன்படுத்த வேண்டும். அதிகாலையில் மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயிலிட்டு மென்று சாப்பிட்டு நான்கு மணிநேரம் எதையம் உண்ணாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in