tamilkurinji logo


 

கன்னியாகுமரி, சென்னையில் கடல் சீற்றம்,




செய்திகள் >>> தமிழகம்

கன்னியாகுமரி, சென்னையில் கடல் சீற்றம்

First Published : Thursday , 29th December 2011 09:10:50 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


கன்னியாகுமரி, சென்னையில் கடல் சீற்றம்,

கன்னியாகுமரியில் நேற்று ஒரு புறம் கடலில் சீற்றம் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் கடல் உள்வாங்கியது.

சுனாமிக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. திடீர் என்று கடலில் சீற்றமும், திடீர் என்று கடல் அமைதியாகவும் காணப்பட்டது.

கடந்த 26-ந் தேதி சுனாமி நினைவு தினத்தின் போது அலைகள் இல்லாமல் கடல் அமைதியாக காணப்பட்டது. நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் வங்க கடல் பகுதியில் கடல் உள்வாங்கியது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள பாறைகள் எல்லாம் வெளியே தெரிந்தன

நேற்று 2-வது நாளாக திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல்பகுதி அமைதியாக இருந்தது. மேலும் அப்பகுதியில் 10 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. அப்பகுதியில் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால் திருவள்ளுவர் சிலை பகுதியிலும் நீர்மட்டம் தாழ்ந்தது. அதனால் நேற்று 2-வது நாளாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

ஆனால் கன்னியாகுமரியின் மற்றொரு பகுதியான இந்திய பெருங்கடலும், அரபிக்கடலும் ஆக்ரோஷமாக காணப்பட்டன. அங்கு ராட்சத அலைகள் எழுந்தன.

சென்னை மெரினாவில் கடல் கொந்தளிப்பு

சென்னை மெரினாவில் கடல் கொந்தளித்து கரையை நோக்கி அலை வந்தது கடற்கரை மணலில் 100 அடி துரத்திற்கு கடல் தண்ணீர் வந்ததால் அந்தப் பகுதி முகத்துவாரம் போல் காட்சியளித்தது.

சென்னை மெரினா கடலில் நேற்று எழுந்த அலையின் சீற்றம் சுனாமியை மீண்டும் நினைவுபடுத்துவதாக அமைந்தது. `தானே' புயல் காரணமாக கடலில் அலையின் சீற்றம் அதிகரித்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் இதற்கு விளக்கம் தரப்பட்டது.

நேற்று அதிகாலை நேரத்தில் சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவொற்றிïர், எண்ணூர் கடற்பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் கொந்தளித்த வண்ணம் இருந்தது.

கரையை தாண்டி அலையின் வேகம் இருந்ததால் கடற்கரை மணலில் 100 அடி தூரத்திற்கு கடல் நீர் புகுந்தது. இதனால் கடற்கரை மணல் பகுதி கடல் நீர் தேங்கி ஏரி போல் காட்சியளித்தது. கடலுக்கும் இந்த தற்காலிக ஏரிக்கும் இடையே சில மீட்டர் இடைவெளி இருந்து, பார்ப்பதற்கு முகத்துவாரம் போல் காட்சியளித்தது.

திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. கடலில் சுமார் 20 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் தோன்றி கடல் அரிப்பு தடுப்புச் சுவரைத் தாண்டி கடல் நீர் சாலையிலும், கடலோரத்தில் உள்ள வீடுகளிலும் புகுந்தது.

இதனால் அவர்கள் வீடுகளைப் பூட்டி விட்டு பாதுகாப்பான இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.


கன்னியாகுமரி, சென்னையில் கடல் சீற்றம், கன்னியாகுமரி, சென்னையில் கடல் சீற்றம், கன்னியாகுமரி, சென்னையில் கடல் சீற்றம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
கேரள மற்றும் தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு

மேலும்...

 சென்னையில் 28-ம் தேதி முதல் வெயில் அதிகரிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
சென்னையில் வரும் 28-ம் தேதியில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரிக்கும், அதேசமயம், நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று இரவு அல்லது நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் பிரதீப்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in