கரைபுரண்டோடும் காவிரி செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி

கரைபுரண்டோடும் காவிரி செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி
கரைபுரண்டோடும் காவிரியாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

 இதன் காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதை பார்க்க கடந்த சில நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். மேலும் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தை செல்போனில் படம் பிடித்தும் செல்பி எடுத்தும் மகிழ்கிறார்கள்.


காவிரியில் செல்பி இந்நிலையில் பீதர் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான இரண்டு என்ஜினீயர்கள் சமீர் ரகுமான் மற்றும் பவானி சங்கர் வெள்ளப்பெருக்கை காண சென்றனர். மேகதாதுவில் ஒரு பாறை மீது ஏறி நின்று சமீர் ரகுமான் காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து செல்லும் காட்சியுடன் செல்பி எடுத்துள்ளார்.

அப்போது கால் தவறி சமீர் ரகுமான் காவிரி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த நண்பர் பவானிசங்கர் ஆற்றில் குதித்து, சமீர் ரகுமானை காப்பாற்ற முயன்றுள்ளார். அடித்து செல்லப்பட்ட நண்பர்கள் ஆனால் காவிரி ஆற்றில் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரைபுரண்டோடும் வெள்ளத்தில் 2 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் 2 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களது உடல்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மேகதாது காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் செல்பி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


https://goo.gl/pQPycc






27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்