tamilkurinji logo


 

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ விபத்தில் மரணம்,Karnataka Congress MLA Siddu Nyama Gowda dies in road accident ...tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Karnataka,Congress,MLA,Siddu,Nyama,Gowda,dies,in,road,accident,...tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ விபத்தில் மரணம்

First Published : Monday , 28th May 2018 01:11:17 PM
Last Updated : Monday , 28th May 2018 01:11:17 PM


கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ விபத்தில் மரணம்,Karnataka Congress MLA Siddu Nyama Gowda dies in road accident ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

கர்நாடகாவில் கடும் பரபரப்புக்கிடையே பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைபற்றிய நிலையில், அந்த கட்சி எம்எல்ஏ ஒருவர் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 224 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 222 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. 2 இடங்கள் காலியாக உள்ளன. தனி்ப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக சார்பில் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.

காங்கிரஸூக்கு 78 உறுப்பினர்கள், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 36 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் உறுப்பினர் ஒருவரும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார்.

நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு தற்போதைய குமாரசாமிக்கு உள்ளது. அதுமட்டுமின்றி எப்போது தங்கள் தரப்பு எம்எல்ஏக்கள் இழுக்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாக ஆளும் தரப்பு புகார் கூறி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் இன்று உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் ஜாம்கண்டி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சித்து நியாம் கவுடா.  இவர் தற்போதைய எம்எல்ஏ மட்டுமின்றி முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார்.

டெல்லி சென்ற அவர், கோவாவில் இருந்து கர்நாடகாவின் பாகல்கோட் நகருக்கு காரில் வந்துகொண்டிருந்தார். துளசிகேரி அருகே வந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் எம்.எல்.ஏ. சித்து உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக அரசியல் களம் பரபரப்பாக உள்ள சூழலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது, ஆளும் கூட்டணியை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ விபத்தில் மரணம்,Karnataka Congress MLA Siddu Nyama Gowda dies in road accident ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ விபத்தில் மரணம்,Karnataka Congress MLA Siddu Nyama Gowda dies in road accident ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ விபத்தில் மரணம்,Karnataka Congress MLA Siddu Nyama Gowda dies in road accident ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு

மேலும்...

 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்

மேலும்...

 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in