கர்ப்பிணி பெண்ணை கொலைசெய்து நாடகமாடிய கணவன் கைது

கர்ப்பிணி பெண்ணை  கொலைசெய்து நாடகமாடிய  கணவன் கைது
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38). இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு பெனித்தா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது புஷ்பா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த 15-ந் தேதி காலை புஷ்பா வீட்டின் அருகே இருக்கும் கரும்பு தோட்டத்தில் உள்ள பம்பு செட் கிணற்றுக்கு குளிக்க சென்றார். அங்கு அவர் கழுத்தில் துண்டால் இறுக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்து இருந்த நகை மற்றும் காதில் கிடந்த கம்மல் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாலை பந்தல் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக குற்றவாளியை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசாரை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டு இருந்தார். தனிப்படையினரும் கொலையாளியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். கடந்த 5 நாட்களாக குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் புஷ்பா கொலை தொடர்பாக அவரது கணவர் ராமதாஸ் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

ராமதாஸ் மும்பையில் கூலி வேலை பார்த்து வந்தார். இதனால் அடிக்கடி மும்பை சென்று வந்தார். அப்போது புஷ்பா தனது தாய் வீடான விலந்தைக்கு சென்று அங்குள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் சொந்த ஊர் திரும்பினார்.

அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும், புஷ்பாவை நீ வேலைக்கு செல்லக்கூடாது என்று கூறி நிறுத்தினார். புஷ்பா பயன்படுத்தி வந்த செல்போனையும் பறித்து கொண்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியது.

மேலும் ராமதாஸ், தனது மனைவியை கொடுமை படுத்த தொடங்கியுள்ளார். தன்னை புஷ்பா மதிக்காமலும், தனது பேச்சை கேட்காமலும் இருந்ததால் ராமதாஸ் ஆத்திரத்துடன் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து புஷ்பாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 15-ந் தேதி காலை புஷ்பா வீட்டில் அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்கு குளிக்க சென்றார். அப்போது ராமதாசும் பின்தொடர்ந்து சென்றார். அந்த நேரத்தில் புஷ்பாவின் கழுத்தில் துண்டை வைத்து இறுக்கி கொலை செய்து உள்ளார்.

மேலும் உடலை அங்கேயே போட்டு சென்றால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணிய ராமதாஸ், வழக்கை திசைதிருப்ப நகைக்காக புஷ்பாவை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று நம்ப வைப்பதற்காக புஷ்பா கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயின், ஒரு காதில் கிடந்த கம்மல் ஆகியவற்றை பறித்துக் கொண்டார். மற்றொரு காதில் கிடந்த கம்மலை கழற்ற முடியாமல் விட்டு சென்றுள்ளார்.

புஷ்பாவின் முகத்தை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது முகத்தை விவசாய நிலத்தில் உள்ள சேற்றில் அமுக்கி வைத்துள்ளார்.

பின்னர் ராமதாஸ் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் குளிக்க சென்ற மனைவியை காணவில்லை என அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது வயல்வெளியில் புஷ்பா பிணமாக கிடப்பதை அந்த பகுதியில் வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராமதாசும் அங்கு சென்று பார்த்தார். புஷ்பாவின் உடலைபார்த்து கதறி அழுதுள்ளார்.

பின்னர் புஷ்பாவின் உடலை அங்கிருந்து தனது வீட்டுக்கு தூக்கி சென்று, முகத்தில் இருந்த சேற்றை சுத்தம் செய்துள்ளார். மேலும் தன் மீது யாரும் சந்தேகப்படாமல் இருக்க கதறி கதறி அழுத வண்ணம் இருந்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


https://goo.gl/wPNpjo


17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்