கற்பழிப்பு புகார் அளிக்க பை ஒன்றில் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்ற இளம்பெண்

கற்பழிப்பு புகார் அளிக்க பை ஒன்றில் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்ற இளம்பெண்
உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்க கையில் கருவுடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்படுவதும் தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை நிரூபிக்க இளம் பெண் தனது 5 மாத கருவை கையில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹசன்பூர் கொட்வாலி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் தனது தாயுடன் ஹசன்பூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.


அதில் மனோஜ் என்ற 22 வயது இளைஞர் தன்னை 5 மாதங்களுக்கு முன் துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்ததாக என தெரிவித்து உள்ளார். மேலும் அந்த இளைஞர் தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார் அந்த பெண்.


கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரமாக பையில் வைத்து 5 மாத கருவையும் கையில் எடுத்து சென்று காண்பித்தார். பையில் கரு இருந்ததைக் கண்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தடயவியல் சோதனை இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய மனோஜை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கருவை பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு இளம்பெண் ஒருவர் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்று பலாத்கார புகார் அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


https://goo.gl/SH2BSB






02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை