காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்

காதலி திருமணம் செய்ய மறுத்தலால்  ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு பெண்ணை நீண்டகாலமாகக் காதலித்து வந்தார்.


இந்நிலையில், அந்தபெண்ணை திருமணம் செய்வதற்காக தான் பணியாற்றிய நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.6.74 லட்சம் பணத்தை ஜிதேந்திர கோயல் திருடினார்.

அதன்பின் அந்தப் பெண்ணிடம் சென்று திருமணம் செய்து கொள்வது குறித்துப் பேசியுள்ளார். ஆனால், அந்தப் பெண் உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.


வேறு ஒருவருடன் தனக்கு நிச்சயம் முடிந்துவிட்டதாகக் கூறிவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த ஜிதேந்திர கோயல், தான் வைத்திருந்தபணத்தில் ரூ.5 லட்சத்தை அந்த பெண்ணின் கண்முன் தீயிட்டு கொளுத்தினார்.

இதற்கிடையே நிதிநிறுவனத்தார் பணம் காணாமல் போனது குறித்து சேஹோர் போலீஸ் நிலையத்தில்நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில் ஜிதேந்திர கோயல் திருடியதுகண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜிதேந்திர கோயலின் சொந்த கிராமத்துக்குச் சென்று அவரை இன்றுகைது செய்தனர்.

இது குறித்து சோஹோர் போலீஸ் ஆய்வாளர் நிரஞ்சன் சர்மா கூறுகையில், ஜிதேந்திர கோயலிடம் நடத்தியவிசாரணையில் அந்தப் பெண்ணின் சம்மதம் அறியாமலேயே அவரைத் திருமணம் செய்துகொள்வதற்காக நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.6.74 லட்சம் பணத்தை திருடியுள்ளார்.

ஆனால், அந்தப் பெண் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தவுடன், ஆத்திரம் தாங்காமல் ரூ.5 லட்சம்பணத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.


ஆனால் உண்மையில் அந்தப் பெண்ணை கோயல் கொலைசெய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால், பணத்தை எரித்தவுடன் அந்தப் பெண் அங்கிருந்துஓடிவிட்டார்.

எரிந்துபோன ரூ.5 லட்சத்தில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகளாகும். கோயல் மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.
https://goo.gl/UzU4ru


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்