கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பங்குகளை வாங்கி குவித்த முதலீட்டாளர்கள்

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பங்குகளை  வாங்கி குவித்த முதலீட்டாளர்கள்
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே இந்நிறுவனப் பங்கின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களும், அதிக நிகர சொத்துள்ள தனிநபர்களும் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி குவித்துள்ளனர். பல சில்லறை முதலீட்டாளர்களும் கூட அண்மைக் காலத்தில் இப்பங்குகளை வாங்குவதில் பெரும் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது.

ஓர் ஆண்டிற்கு முன்னர் இந்நிறுவனப் பங்கின் விலை ரூ.31-ஆக இருந்தது. இது, இவ்வாண்டு ஆகஸ்டு மாதத்தில் வரலாறு காணாத அளவில் ரூ.7.01-ஆக குறைந்து இருந்தது. தற்போது ரூ.10.40-ஆக உள்ளது. இந்நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் கிங்ஃபிஷரில் தமது பங்கு மூலதனத்தை இரண்டு மடங்கிற்கு மேல் உயர்த்தி 2.46 சதவீதமாக அதிகரித்துள்ளன. இது, முதல் காலாண்டில் (ஏப்ரல்- ஜுன்) 0.98 சதவீதமாக இருந்தது. சில்லறை முதலீட்டாளர்கள் தமது பங்கு மூலனத்தை 17.59 சதவீதமாக உயர்த்திக் கொண்டுள்ளனர்.

எச்.என்.ஐ. எனப்படும் அதிக நிகர சொத்துள்ள தனிநபர்கள், ஏப்ரல்-ஜுன் மாத காலத்தில், கிங்ஃபிஷர் நிறுவனத்தில் 8.45 சதவீத பங்கு மூலதனம் கொண்டிருந்தனர். இது, இப்போது 13.78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவர்கள் ரூ.1 லட்சத்திற்கு மேல் பங்குகளை கொண்டவர்களாவர். ரூ.1 லட்சம் வரையில் பங்குகளை வைத்திருப்பவர்கள் சில்லறை முதலீட்டாளர்கள் எனப்படுகின்றனர். கிங்ஃபிஷரில் இவர்களின் பங்கு மூலதனம் 3.81 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், அதிக நிகரச் சொத்துள்ளவர்களின் பங்கு மூலதனம் 4.59 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே சமயம் உள்நாட்டு நிதி நிறுவனங்களின் பங்கு மூலதனம் 13.20 சதவீதத்திலிருந்து 13.14 சதவீதமாக சரிவடைந்துள்ளது. நிதி நிறுவன முதலீட்டாளர்களின் (காப்பீடு, வங்கி மற்றும் நிதிச் சேவை துறைகள்) பங்கு மூலதனம் 15.60 சதவீதத்திலிருந்து 14.18 சதவீதமாக குறைந்துள்ளது. நிறுவனர்களின் மொத்த பங்கு மூலதனம் 35.86 சதவீதத்திலிருந்து 35.83 சதவீதமாக சரிவடைந்துள்ளது. நிறுவனர்கள் தமது பங்கு மூலதனத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை பல்வேறு நிதி நிறுவனங்களிடம் அடகு வைத்துள்ளனர்.
https://goo.gl/9jUddG


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்