குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் | best foods to prevent stomach cancer

குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் | best foods to prevent stomach cancer
குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள்

பூண்டு
 
பூண்டுகுடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சால்மன்

வைட்டமின் டி குறைபாடு கூட சில சமயங்களில் குடல் புற்றுநோயை உண்டுபண்ணும் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சால்மன் மீன் இந்த வைட்டமின் டி சத்து ஏராளமான அளவில் உள்ளது. அதுவும் மற்ற உணவுகளை விட சால்மன் மீனில் தான் ஏராளமான அளவில் வைட்டமின் டி சத்துள்ளது. ஆகவே வாரத்திற்கு ஒருமுறையாவது சால்மன் மீனை சாப்பிடுங்கள்.

முட்டைகோஸ்

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பொருட்கள் நிறைய உள்ளன. இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை  முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது .


இஞ்சி

ஒருவர் தொடர்ந்து 28 நாட்கள் இஞ்சியை உட்கொண்டு வந்தால் 28 சதவீதம் குடலில் அழற்சி வரும் அபாயம் குறைவதாக புற்றுநோய் ஆராய்ச்சி தடுப்பு கூறுகிறது. குடலில் அழற்சி வந்தால், அது குடலில் கட்டிகளின் வளர்ச்சியை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தினமும் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முளைகட்டிய பயறு

இதில் லைசின் எனப்படும் அமினோ அமிலம் அதிக அளவில் உள்ளது. சல்ஃபோராபேன் என்ற ரசாயனம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. பயறாகச் சாப்பிடுவதைக் காட்டிலும், முளைகட்டி பயறாகச் சாப்பிடும்போது, அதில் சல்ஃபோராபேன் அளவு 50 சதவிகிதம் அதிகரிக்கிறதாம். முழுப் பலனையும் பெற, முளைகட்டிய பயறைப் பச்சையாகச் சாப்பிடுவதே சிறந்தது.


காளான்

 காளான் மிகச்சிறந்த புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுப் பொருள். அதிலும் பசலைக்கீரையுடன் காளானை சேர்த்து ஆம்லெட் போட்டு தினமும் சாப்பிட்டால், புற்றுநோயே தாக்காது. அதிலும் வெள்ளை பட்டன் காளானில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான எர்கோதியோனைன் என்னும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது.

வாழைப்பழம்


வாழைப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் அற்புதமான பழம். இதில் உள்ள பொட்டாசியம் சத்து, மெட்டபாலிச இயக்கத்தை மேம்படுத்துவதோடு, உடலில் ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் மன இறுக்கத்தை சரிசெய்யும். ஆய்வு ஒன்றில் ஒருவர் தொடர்ச்சியாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் ஆரோக்கியமாக இருந்து, வயிற்று அல்சர் மற்றும் குடல் புற்றுநோய் வருவது தடுக்கப்படும்.

சிட்ரஸ் பழங்கள்

 எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைகளில், உள்ள மோனோதெர்ஃபேன்கள் (Monoterpenes), புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன்களை அழிக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்து உள்ள சிட்ரஸ் பழச் சாறுகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாய், தொண்டை மற்றும் வயிற்றில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கும்.


கீரை வகைகள்
 
புதிய பச்சை இலை காய்கறிகளில். ஃபோலியேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இந்த உணவு புற்றுநோய் உண்டாக்கும் விளைவுகளை எதிர்த்து போராடுகிறது. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள இவை எலும்பு மற்றும் தசைகளில் உள்ள பிரச்சனைகளை குணமாக்க முடியும்.
https://goo.gl/zA4g8K






01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

09 Jul 2018

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses

05 Jul 2018

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

28 Jun 2018

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்