tamilkurinji logo


 

கேரளத்தில் புதிய அணை கூடாது: பிரதமரிடம் ஜெயலலிதா மனு,




செய்திகள் >>> தமிழகம்

கேரளத்தில் புதிய அணை கூடாது: பிரதமரிடம் ஜெயலலிதா மனு

First Published : Monday , 26th December 2011 09:18:16 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


கேரளத்தில் புதிய அணை கூடாது: பிரதமரிடம் ஜெயலலிதா மனு,

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்டும் முயற்சி எதையும் மேற்கொள்ளக் கூடாது என கேரள அரசுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாட்டில் இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார். பின்னர் இரவு 7 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, சுமார் 40 நிமிடங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அப்போது 16 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் வழங்கினார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என்று 27-2-2006 அன்று சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. இந்த அணையின் பாதுகாப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த உத்தரவை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கில், கேரள அரசு, கேரள பாசனம் மற்றும் நீர்பாதுகாப்பு சட்டத்தில் 18-3-2006 அன்று திருத்தம் செய்தது.

அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அதே நேரத்தில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை விவாதித்து அறிக்கை அளிப்பதற்காக அதிகாரம் படைத்த குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்தக் குழு, தனது அறிக்கையை வரும் பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு பொய் பிரசாரம் செய்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், இந்த அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்றும் 9-12-2011 அன்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களில் அணைப்பகுதியில் 22 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த 4 மாதங்களில் அணைக்கு அப்பால் 4 தடவை மட்டுமே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1980-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை அணையைப் பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், வெள்ள நீராலோ, வேறு எந்த பாதிப்பினாலோ அணை உடைவதற்கான வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை மற்றும் கோதாவரி, கிருஷ்ணா கதவணை ஆகியவை முல்லைப் பெரியாறு அணையைவிட மிகவும் பழமையானவை. அவை இன்றுவரை பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன. அவற்றின் பாதுகாப்பு குறித்து எந்த கேள்வியும் எழவில்லை.

கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து திட்டமிட்டு விஷமப் பிரசாரம் செய்வதால் அணைப் பகுதியில் உள்ள தமிழக சொத்துக்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. எனவே, அணைப் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அணைப் பகுதியில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும், அவை தொடர்பாக எடுக்க வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் உங்களுக்கு 23-11-2011, 29-11-2011, 4-12-2011 ஆகிய தேதிகளில் நான் எழுதியுள்ள கடிதங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு கேரள அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தேன். அத்துடன் உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையை அணைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கோரியிருந்தேன்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கேரள அரசு மதிக்க வேண்டும் என்றும், கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு திருத்த சட்டத்தில் (2006) திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு வசதியாக அணையை பலப்படுத்துவதற்காக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தக்கூடாது என்றும் தமிழக சட்டசபையில் 15-12-2011 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததால் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தமும் அப்போது தெரிவிக்கப்பட்டது. 1979-ம் ஆண்டு முதல் அணையின் நீர்பரப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று, கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் கீழே உள்ள இடங்கள் நிலநடுக்கத்தாலோ, வெள்ளப் பெருக்காலோ அல்லது இவை இரண்டினாலோ பாதிக்கப்படும் அபாய சூழ்நிலைகளை கண்டறியும் நோக்கில், உங்கள் தலைமையின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அதற்காக ஒரு தற்காலிக பாதுகாப்பு செயல்திட்டங்களை உருவாக்குவதற்காக ஒரு நிபுணர் குழுவை 12-12-2011 அன்று அமைத்திருக்கிறது என்பதை கேள்விப்பட்டு தமிழக அரசு அதிர்ச்சியடைந்தது.

இது, கேரள அரசின் தந்திரத்திற்கு இணங்கிப் போகும் செயலாகும். அதோடு ஏற்கனவே முடிந்து போன விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டிற்கும், அதனால் அமைக்கப்பட்ட அதிகார குழுவுக்கும் தெரிவிக்கும் செயல் அன்றி வேறு எதுவும் இல்லை. எனவே, தற்போதைய நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு நிபுணர் குழுவை அமைக்க தேவையில்லை. கேரளாவுக்கு ஆதரவான இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், கீழ்க்கண்ட விஷயங்களில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று 27-2-2011 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மதிக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக, 2006-ம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு செய்ய வேண்டும் என்று நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை வலுவாகவும், சிறப்பாகவும் செயல்படுவதால், புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் கேரள அரசுக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்.

மத்திய நீர்வள ஆணையத்தின் ஆலோசனையின்படி, எஞ்சியுள்ள நீண்டகால அணைப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு, தமிழகத்திற்கு தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் கேரள அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும். தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை கேரள அரசு அகற்ற வேண்டும் என்றும் கேரள அரசுக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட இடங்களில் உள்ள கருவிகளையும் பாதுகாப்பதற்காக அங்கு உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிபுணர் குழுவை அமைப்பதற்கான அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவில் உள்ள அம்சங்களை அமல் செய்தால் மாநில அரசுக்கு கூடுதலாக ரூ.1,800 கோடி நிதிச் சுமை ஏற்படும். இதில் மத்திய அரசு எந்த பங்களிப்பும் தராது.

மேற்படி மசோதாவின் அம்சங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், ஏற்க முடியாததாகவும் உள்ளன. தமிழகத்துக்கு இப்போது அளிக்கப்படும் அரிசி மற்றும் உணவு தானிய ஒதுக்கீட்டு அளவை தொடர்ந்திட வேண்டும். மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவையும் பழைய நிலை அளவுக்கு உயர்த்திட வேண்டும். மக்களுடன் நெருங்கிய தொடர்பில் மாநிலங்கள் இருக்கக் கூடிய கூட்டாட்சி முறையில், மக்கள் நலத் திட்டங்களை உருவா க்கும் பொறுப்பை மாநிலங்களிடமே விட்டுவிடுவதுதான் சிறந்ததாக இருக்கும். எனவே தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா வரம்பில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு இப்போது 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையும் உள்ளது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே, மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க முன் வரவேண்டும். மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்பு நிதி அளித்ததுபோல பின்தங்கிய மாநிலங்களுக்காக அளிக்கப்படும் நிதி அல்லது அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக அளிக்கப்படும் சிறப்பு நிதியாக மத்திய அரசு கொடுக்க முன் வரவேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அல்லது விஷமிகள் தாக்குவதை தேசிய பிரச்னையாகக் கருத வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக இதைக் கருத வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்.

2012 ஜனவரியில் இலங்கையுடன் பேச்சு நடக்கும்போது, இதுகுறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக உள்ள மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கேரளத்தில் புதிய அணை கூடாது: பிரதமரிடம் ஜெயலலிதா மனு, கேரளத்தில் புதிய அணை கூடாது: பிரதமரிடம் ஜெயலலிதா மனு, கேரளத்தில் புதிய அணை கூடாது: பிரதமரிடம் ஜெயலலிதா மனு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு
திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார்.

மேலும்...

 மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்
சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in