கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி

கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.


பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சூறைக்காற்றால் மரங்கள் முறிந்தன. மேலும், பலத்த காற்று வீசுவதால் மின்கம்பங்கள் சரிந்தது. மழை வெள்ளத்தால் ஆறு, கால்வாய், கழிவநீர் ஒடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கேரளாவில் நான்கு மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை காரணமாக நேற்று ஒரேநாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். கோட்டயம் பகுதியை சேர்ந்த ஆலன்ஜினு (வயது 14) ஓடையில் தவறி விழுந்தும், கோழிக்கோடை சேர்ந்த தீபு (34) குளத்தில் மூழ்கியும் பலியானார்கள். ஆலப்புழாவை சேர்ந்த பாபு (62), மலப்புரம் பத்ரோஸ் (44) ஆகியோர் மின்னல் தாக்கியதால் பலியானார்கள்.

அதேபோல கொல்லத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (62) மரம் விழுந்தும், மலப்புரத்தை சேர்ந்த நாராயணன் (73), கொச்சியை சேர்ந்த முகம்மது ரகீம் (22) ஆகியோர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலியானார்கள்.

கேரளாவில் கடலும் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. விழிஞ்ஞம் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகப் பணியும் இந்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பாலமும் கடல் சீற்றம் காரணமாக இடிந்து கடலில் விழுந்துவிட்டது. இதை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

https://goo.gl/SHKTmg


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை