கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம் அதிகரித்து உள்ளது, வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை.


கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களில் 10 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து வைரஸ் பரவலை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய குழுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 10 பேர் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே வைரஸ் பரவல் அச்சம் அங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலத்தை நிர்வாகம் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை, மாறாக மின்மயானத்தில் வைத்து சுகாதாரத்துறை தரப்பிலே எரிக்கப்பட்டு உள்ளது. வைரஸ் பரவல் தடுப்பை உறுதிசெய்யும் வகையில் அரசு நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சங்காரோத் பகுதியில் உயிரிழந்த சகோதரர்கள் இறுதிசடங்கில் கலந்துக்கொண்ட ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

https://goo.gl/53YPgN


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்