tamilkurinji logo


 

கேரளாவுக்கு காய்கறி வேனில் கடத்திய ரூ.1 கோடி பணம் சிக்கியது,
செய்திகள் >>> தமிழகம்

கேரளாவுக்கு காய்கறி வேனில் கடத்திய ரூ.1 கோடி பணம் சிக்கியது

First Published : Saturday , 24th December 2011 10:46:54 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


கேரளாவுக்கு காய்கறி வேனில் கடத்திய ரூ.1 கோடி பணம் சிக்கியது,

கோவையில் இருந்து கேரளாவுக்கு காய்கறி டெம்போ வேனில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி பணம் பரிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த விபரம் வருமாறு:

கோவை மாநகர போலீசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் கோவையில் இருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் டெம்போ வேன் ஒன்றில் ரூ.11/4 கோடி ரொக்கம் கடத்தி செல்லப்படுவதாகவும், அந்த டெம்போ வேனின் பதிவு எண், நிறம், அடையாளம் ஆகிய தகவலை சொல்லி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட டெம்போ வேனை சோதனை செய்யுமாறு போலீஸ் கமிஷனர் அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இரவு ரோந்து பணியில் இருந்த அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர்.

கோவையில் இருந்து கேரளா செல்லும் காய்கறி லாரிகள் அனைத்தும் கரும்புக்கடை ஆத்துப்பாலம் வழியாகத்தான் போக வேண்டும் என்பதால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது நள்ளிரவு 1றி மணி அளவில் பணம் கடத்தப்படுவதாக கூறப்பட்ட டெம்போ வேன் அங்கு வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது டிரைவர் இருக்கையின் பின்புறம் ஒரு பை வைக்கப்பட்டிருந்தது. அந்த பையை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 20-க்கும் மேற்பட்ட பண்டல்களில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள், நூறு ரூபாய் நோட்டுகள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு அவை பண்டல்களாக கட்டப்பட்டு இருந்தன.

பணத்தை கைப்பற்றிய போலீசார் இந்த பணம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்று வேன் டிரைவரான ஊட்டியை சேர்ந்த பிரேமதாஸ் (வயது 31), மற்றும் வேனில் பயணம் செய்த வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ராஜசேகர்(32), சாயிபாபா காலனியை சேர்ந்த தமிழ்அழகன் (51), போத்தனூரை சேர்ந்த தாவூத்(46) மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த அசோகன்(49) ஆகியோரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். அவர்கள் வைத்திருந்த சீட்டில் ரூ.1 கோடியே 21 லட்சத்து 2 ஆயிரத்து 100 என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து வேனுடன் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். வேனில் இருந்த பணத்தை போலீசார் எண்ணியபோது ரூ.98 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

துண்டு சீட்டில் எழுதியிருந்தபடி பணம் இல்லை. எனவே மீதி பணம் என்ன ஆனது? இந்த பணம் எங்கே கொண்டு செல்லப்படுகிறது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் பணம் கொண்டு செல்லப்பட்ட டெம்போ வேன் கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்த சர்க்காரியா என்பவருக்கு சொந்தமானது என்றும், இவர் காய்கறி வியாபாரம் மற்றும் மர வியாபாரம் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் முழு பணத்திற்கும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதையடுத்து இந்த பணத்தையும் லாரியில் சென்றவர்களையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

வருமானவரித்துறை அதிகாரிகள் வேன் உரிமையாளர் சர்க்காரியாவை தொடர்பு கொண்டு ரூ.1 கோடி ரொக்கத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளனர். எனவே இந்த பணத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால்தான் பணம் உண்மையான பணமா? அல்லது கறுப்பு பணமா? அல்லது ஹவாலா பணமா? யாருக்கு கொண்டு செல்லப்பட்டது? என தெரியவரும்.

கேரளாவுக்கு காய்கறி வேனில் கடத்திய ரூ.1 கோடி பணம் சிக்கியது, கேரளாவுக்கு காய்கறி வேனில் கடத்திய ரூ.1 கோடி பணம் சிக்கியது, கேரளாவுக்கு காய்கறி வேனில் கடத்திய ரூ.1 கோடி பணம் சிக்கியது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.இந்த நிலையில்

மேலும்...

 சேலம்-சென்னை ரெயில் ரூ.5.75 கோடி கொள்ளை : 2 ஆண்டுகளுக்கு பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது.
சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம,் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பின், நாசா சாட்டிலைட் உதவியுடன் துப்பு துலங்கியுள்ளது.கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி

மேலும்...

 அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது
அடையாறு, வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல திருடனை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.2 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அடையாறு காவல் மாவட்டங்களான 

மேலும்...

 திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 6 அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது
திருச்சி விமான நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 6 சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 19 பேரை சிபிஐ கைது செய்தது. லட்சகணக்கான் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in