tamilkurinji logo


 

கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்,
செய்திகள் >>> தமிழகம்

கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்

First Published : Wednesday , 28th December 2011 09:35:21 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்,

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநில பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ் போக்குவரத்து நேற்று மீண்டும் நிறுத்தப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை காரணமாக தேனியில் இருந்து போடி வழியாகவும், போடி நகரில் இருந்தும் கேரள மாநிலம் பூப்பாறை, மூணாறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு போக்குவரத்து பஸ்கள் நிறுத்தப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு போடிமெட்டு மலை கிராம மக்களின் வசதிக்காக போடிமெட்டு தமிழக எல்லை வரை மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குமுளி சாலையில் லோயர்கேம்ப்-தமிழக குமுளி இடையே மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டது. கம்பம் நகரில் இருந்து கேரள மாநிலம் கட்டப்பனை மற்றும் நெடுங்கண்டத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் நேற்று முன்தினம் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் கேரள மாநிலத்துக்கு சென்ற தமிழர்களை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த க.புதுப்பட்டியை சேர்ந்த வாலிபர் முத்துசெல்வன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதற்கிடையே கேரள மாநிலத்துக்கு பஸ் மற்றும் வாகனபோக்குவரத்து நடத்த உத்தமபாளையம் வக்கீல்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழர்கள்மீது தாக்குதல், வக்கீல்கள் எதிர்ப்பு காரணமாக கேரள மாநிலத்துக்கு இயக்கப்பட்ட பஸ்போக்குவரத்து நேற்று நிறுத்தப்பட்டு விட்டது.

போடிநகரில் இருந்து நேற்று காலை பூப்பாறை பகுதிக்கு ஒரு பஸ் புறப்பட்டு சென்றது. ஆனால் அந்த பஸ் போடிமெட்டு தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. தமிழக குமுளிக்கு இயக்கப்பட்ட பஸ் போக்குவரத்தும் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. லோயர்கேம்ப் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம், கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம், கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை
துணை நடிகையின் கள்ளக்காதலனை கொடைக்கானலில் வைத்து, கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தை தலைமறைவானார். இதில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகார்தே நகரில் கேட்பாரின்றி நின்ற காரை கடந்த 25ம் தேதி போலீசார் மீட்டனர். காரில்

மேலும்...

 சேலம்-சென்னை ரெயில் ரூ.5.75 கோடி கொள்ளை : 2 ஆண்டுகளுக்கு பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது.
சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம,் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பின், நாசா சாட்டிலைட் உதவியுடன் துப்பு துலங்கியுள்ளது.கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 கருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்
24 மணி நேரத்துக்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை அறிவிப்புதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. வயது மூப்பினால் அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in