tamilkurinji logo


 

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சாப்பிடும் உணவு முறைகள்,summer foods recipes tamil maruthuvam beauty tipps alagu kurippu patti vaihyam

summer,foods,recipes,tamil,maruthuvam,beauty,tipps,alagu,kurippu,patti,vaihyam




கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சாப்பிடும் உணவு முறைகள்

First Published : Tuesday , 26th April 2016 01:07:45 PM
Last Updated : Tuesday , 26th April 2016 01:07:45 PM


கோடை வெயிலில்   இருந்து தப்பிக்க   சாப்பிடும் உணவு முறைகள்,summer foods recipes tamil maruthuvam beauty tipps alagu kurippu patti vaihyam

கோடை வெயிலால் ஏற்படும் நோய்களில் இருந்து செலவில்லாமல் தப்ப பல எளிய வழிமுறைகள் பல உள்ளன

கோடை வெயில் நேரத்தில் பிரிட்ஜில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைபருகக்கூடாது. இதற்குப் பதிலாக மண் பானையில் சுத்தமான தண்ணீரை நிரப்பி இதை அதிகம் பருக வேண்டும்.

இதனால் உடல்சூடு தணிவதுடன் பித்தம் மட்டுப்படுத்தப்படும். வழக்கமாக பருகும் தண்ணீரின் அளவை விட கூடுதலாக இரண்டு மடங்கு பருக வேண்டும்.

வெளியிடங்களுக்கு செல்லும் போதும் நன்னாரி குளிர் நீரை எடுத்துச் சென்று அருந்த வேண்டும்.


வியர்வையால் தோல்களில் வியர்க்குரு உள்ளிட்ட சருமநோய்கள் ஏற்படும். இதை தவிர்க்க அருகம்புல் சாறு எடுத்து சமளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தைலம் தயாரித்து உடலில் பூசலாம். உணவில் ஜீரகம், காய்கள், கனி வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

உடல் சூட்டால் ஏற்படும் மூல நோய் தவிர்க்க அதிக தண்ணீர் பருகுவதுடன் எலுமிச்சை ஜூஸ் பருக வேண்டும். நீரிழிவு வியாதி இருப்பவர்கள் எலுமிச்சையில் சர்க்கரைக்குப் பதில் உப்பு சேர்த்து பருகலாம். நார்ச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.  காரமான உணவுகளை குறைக்க வேண்டும்.

தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு என பழங்களை சாப்பிடுங்கள்.

வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளை ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். இவை உங்களை கோடைக்காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.


தக்காளியும், மாதுளையும், நெல்லியும் கோடைக்காலத்திற்கு கண்கண்ட அமிர்தம் என்பதால் இதனை தினமும் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.


நிறைய நீர், மோர் குடியுங்கள்.

சாலட் எனப்படும் பச்சை காய்கறி கலவையை சின்ன வெங்காயம் சேர்த்து தினமும் இரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிக வியர்வை ஏற்படும் நேரங்களில் கூடுதலாக தண்ணீர் பருகி உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றாக கடைந்த மோர், சிறிய வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். செரிமான சக்தி குறைவாக உள்ள திட மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து நீர் சத்துள்ள உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும்.


கோடை வெயிலில்   இருந்து தப்பிக்க   சாப்பிடும் உணவு முறைகள்,summer foods recipes tamil maruthuvam beauty tipps alagu kurippu patti vaihyam கோடை வெயிலில்   இருந்து தப்பிக்க   சாப்பிடும் உணவு முறைகள்,summer foods recipes tamil maruthuvam beauty tipps alagu kurippu patti vaihyam கோடை வெயிலில்   இருந்து தப்பிக்க   சாப்பிடும் உணவு முறைகள்,summer foods recipes tamil maruthuvam beauty tipps alagu kurippu patti vaihyam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்
நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.

மேலும்...

 அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும்

மேலும்...

 இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம்

மேலும்...

 வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses
சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி,  வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in