tamilkurinji logo


 

கை, கால் முட்டி பகுதிகளில் உள்ள கருமை நீங்க,kai kal mutti karumai niram neenga alagu kurippu Body Scrub for Dark Hands, Feet and Joints Home Remedies for dark finger joints and fingers - Tips

kai,kal,mutti,karumai,niram,neenga,alagu,kurippu,Body,Scrub,for,Dark,Hands,,Feet,and,Joints,Home,Remedies,for,dark,finger,joints,and,fingers,-,Tips
கை, கால் முட்டி பகுதிகளில் உள்ள கருமை நீங்க

First Published : Sunday , 4th October 2015 07:29:25 AM
Last Updated : Sunday , 4th October 2015 07:32:57 AM


கை, கால் முட்டி பகுதிகளில் உள்ள கருமை  நீங்க,kai kal mutti karumai niram neenga alagu kurippu Body Scrub for Dark Hands, Feet and Joints Home Remedies for dark finger joints and fingers - Tips


மூட்டுத்தோல்பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும். மூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீர்செய்ய முடியும். இரத்த ஓட்டம் சீரானால் கறுப்புத் திட்டுக்கள் மறையும்.

தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 – 10  நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும். ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். இறந்த செல்களை உடனடியாக அகற்றும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சளுடன், பசும்பால் சேர்த்து, மூட்டுப் பகுதியில் தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் காயவிட வேண்டும். பின்னர், சோப் பயன்படுத்தி, மூட்டு பகுதியைக் கழுவ வேண்டும். தினமும் இதனைச் செய்து வந்தாலே, சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.

கற்றாழை ஜெல் சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும். கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-30 நிமிடங்கள் அப்படியேவிட வேண்டும். பின்னர், தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். தேன் அதிக அளவு சேர்த்து, தினமும் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.

கடலை மாவு, தயிர் சம அளவு கலந்து, மூட்டுப் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவலாம். கடலை மாவுக்குப் பதில் பாதாம் பருப்பை அரைத்தும் பயன்படுத்தலாம்.

ரோஜா இதழை காயவைத்துப் பொடித்துக் கொள்ளவும். இதனுடன், முல்தானிமட்டிப்பொடி சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டுக் கலக்கி பேஸ்ட் ஆக்கவும். இதைக் கறுப்புத் திட்டுகள் இருக்கும் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், மூட்டுகள் பளபளப்பாகும்


கை, கால் முட்டி பகுதிகளில் உள்ள கருமை  நீங்க,kai kal mutti karumai niram neenga alagu kurippu Body Scrub for Dark Hands, Feet and Joints Home Remedies for dark finger joints and fingers - Tips கை, கால் முட்டி பகுதிகளில் உள்ள கருமை  நீங்க,kai kal mutti karumai niram neenga alagu kurippu Body Scrub for Dark Hands, Feet and Joints Home Remedies for dark finger joints and fingers - Tips கை, கால் முட்டி பகுதிகளில் உள்ள கருமை  நீங்க,kai kal mutti karumai niram neenga alagu kurippu Body Scrub for Dark Hands, Feet and Joints Home Remedies for dark finger joints and fingers - Tips
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

மேலும்...

 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in