கோரிக்கைளை நிறைவேற்ற மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்: வாபஸ் ஆகிறது விவசாயிகள் போராட்டம்!

கோரிக்கைளை நிறைவேற்ற மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்: வாபஸ் ஆகிறது விவசாயிகள் போராட்டம்!
விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கிஷான் சபா  என்ற அமைப்பு நாசிக்கில் இருந்து மும்பைக்கு மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.

இதன்படி அந்த அமைப்பு அதிகளவில் விவசாயிகளை திரட்டியது. ஆயிரக்கணக் கான விவசாயிகள் நாசிக்கில் திரண்டார்கள். அவர்கள் கடந்த 6-ந்தேதி நாசிக்கில் இருந்து 180 கி.மீ. தூரமுள்ள மும்பையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இதில் 35 ஆயிரம் பேர் பங்கேற்று இருப்பதாக கூறப் பட்டது. சட்டசபையை நோக்கிய விவசாயிகளின் இந்த பிரமாண்ட பேரணி மராட்டியத்தின் மற்ற விவசாயிகளையும் இவர்களது பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இது மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து இருக்கிறது.

அம்மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.காலையில் பேரணி சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், நள்ளிரவிலேயே விவசாயிகள் ஆசாத் மைதானம் நோக்கி நடக்க தொடங்கினர்.

சுமார் 75 ஆயிரம் விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் இருப்பதாகவும், இன்னும் ரெயில், பஸ் மூலம் அதிகமான விவசாயிகள் வந்து கொண்டிருப்பதாக மாநில கிசான் சங்க தலைவர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, விவசாயிகளின்  கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க தயாராக இருப்பதாக மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில், விவசாயிகளின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்து இருப்பதாகவும் இதனால், போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை நீர் வளத்துறை மந்திரி கிரிஷ் மகாஜன் வெளியிட்டார். இது குறித்து கிரிஷ் மகாஜன் கூறுகையில்,  விவசாயிகள் கோரிக்கை அனைத்தையும் அரசு நிறைவேற்ற தயாராக உள்ளது.

போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். விவசாயிகள் அனைவரும் தங்கள் ஊருக்கு திரும்பச்செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றார்.
https://goo.gl/RqhRCJ


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை