tamilkurinji logo


 

கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Two children, ayah killed as playschool van falls into pond

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,Two,children,,ayah,killed,as,playschool,van,falls,into,pond




செய்திகள் >>> இந்தியா

கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி

First Published : Tuesday , 12th June 2018 11:29:18 AM
Last Updated : Tuesday , 12th June 2018 11:29:18 AM


கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து   2 குழந்தைகள் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Two children, ayah killed as playschool van falls into pond

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).

இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தனர்.

நேற்று பள்ளி வேனில் ஆதித்தியனும், வித்யலட்சுமியும் அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி முடிந்ததும் மீண்டும் குழந்தைகளை அவரவர் வீட்டில் விட வேனில் ஏற்றப்பட்டனர்.

வேனை அனில்குமார் (45) ஓட்டினார். ஆதித்தியன், வித்யலட்சுமி உள்பட மேலும் 6 குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் இருந்தனர். வேன் சுமார் அரை கி.மீட்டர் தூரம் வந்ததும் வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

வேனில் இருந்த குழந்தைகள் அலறி சத்தம்போட்டனர். அங்குள்ள பகவதியம்மன் கோவில் குளத்தில் வேன் பாய்ந்தது. இந்த குளம் சேறு நிறைந்த குளமாகும். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனை பார்த்தபோது வேன் சேற்றில் மூழ்க தொடங்கியது.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேன் கண்ணாடியை உடைத்து 6 குழந்தைகளை மீட்டனர். இதனிடையே கொச்சி போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். படுகாயங்களுடன் மூழ்கி கொண்டிருந்த டிரைவர் அனில்குமாரை மீட்டனர்.

இதில் குழந்தைகள் ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். பலியான 3 பேரின் உடல்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து   2 குழந்தைகள் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Two children, ayah killed as playschool van falls into pond கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து   2 குழந்தைகள் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Two children, ayah killed as playschool van falls into pond கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து   2 குழந்தைகள் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Two children, ayah killed as playschool van falls into pond
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in