சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்
ஈரோடு அருகே அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்துள்ளார்.

ஈரோடு அருகே கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் பாஷா - அஃப்ரோஸ் பேகம் தம்பதியினர். இவர்களின் மகன் முஹம்மது யாசின், சேமூர் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முகமது யாசின் பள்ளிக்கு சென்றபோது சாலையில் ஓரத்தில் பணம் கிடந்ததை பார்த்துள்ளார்.

இதனையடுத்து பணத்தை பத்திரமாக எடுத்துச் சென்ற முகமது யாசின், அவரது ஆசியரிடம் ஒப்படைத்து சாலையோரம் கிடந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் ஆசிரியர் மூலம் அந்த பணத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷிடம் கொடுத்துள்ளார். பணத்தை பத்திரமாக சேர்க்க உதவிய மாணவன் முஹம்மது யாசினுக்கு காவலத்துறை அதிகாரிகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
https://goo.gl/eVFqR6






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது